விஜய் செம தெளிவு.. அவருக்கு தெரியும் எதை எப்போ செய்யணும்னு.. கன்னட நடிகர் சப்போர்ட்

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்திருக்கும் விஜய் தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். பாபி தியோல், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இந்தப் படம் உருவாகிவரும் சூழலில் விஜய் குறித்து கன்னட நடிகர் கிச்சா சுதீப் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சி களமிறங்குகிறது. பாஜகவும், திமுகவும்தான் தன்னுடைய அரசியல் எதிரி என்பதை கட்சியின் முதல் மாநாட்டில் தெளிவுப்படுத்திவிட்டார் அவர். இதனால் அந்தக் கட்சியினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நடந்துவருகிறது. இடையில் சீமானும் விஜய்யை அவ்வப்போது விமர்சனம் செய்கிறார்.

vijay kicha sudheep

சினிமாவில் மும்முரமாக நடித்துவந்த விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். இனி முழுக்க முழுக்க அரசியல்வாதியாக மாறப்போகும் விஜய் அதன் காரணமாக இன்னும் ஒரே ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தை அ.வினோத் இயக்கிவருகிறார். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க; பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார். கேவிஎன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது.

முதல் மாநாடு: இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினார் அவர். அதில் பேசும்போது தன்னுடைய அரசியல் எதிரி என்றால் அது பாஜகவும், திமுகவும்தான் என்று ஓபனாக போட்டுடைத்தார். இப்படி ஒன்றியத்தில் ஆளும் அரசையும், மாநிலத்தில் ஆளும் அரசையும் ஒருசேர எதிர்க்கிறாரே என்று பலரும் ஆச்சரியம்தான் பட்டார்கள். இருந்தாலும் இப்படி செய்வதற்கு ஒரு தைரியம் வேண்டும் என்று ஒருதரப்பினர் கூறினார்கள்.

விமர்சன விஜய்: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார். ஆனால் பனையூரில் இருக்கும் தனது அலுவலகத்துக்கு மக்களை வரவழைத்து அதனை செய்தார். அது பெரும் விமர்சனத்தை சந்தித்தது. முக்கியமாக, 'அரசியலில் விஜய் Work From Home செய்கிறார்' என்றும் கிண்டல் செய்தார்கள். ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட ட்வீட் ஒன்றை போட்டிருந்தார்.

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்: சூழல் இப்படி இருக்க எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகம் சமீபத்தில் வெளியானது. இதில் விசிக தலைவர் திருமாவளவன், விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் திருமாவளவன் இதில் பங்கேற்கவில்லை. விஜய் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார். அதன் பிறகு பேசிய அவர், 'இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில்கூட திருமாவளவன் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு அவருக்கு பிரஷர் தரப்படுகிறது' என்று கூறினார். மேலும் திமுகவையும் ஓபனாக விமர்சனம் செய்தார்.

கிச்சா சுதீப் பேட்டி: சூழல் இப்படி இருக்க விஜய் குறித்து கன்னட நடிகர் கிச்சா சுதீப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் அளித்திருக்கும் ஒரு பேட்டியில், "விஜய்க்கு ரொம்பவே தெளிவு இருக்கிறது. அவருக்கு இருக்கும் தெளிவு வேறு யாருக்குமே இல்லை. எந்த விஷயத்தை எப்போது செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X