விஜய் ஒரு ஜென்டில்மேன்: சுதீப் புகழ்ச்சி
விஜய் ஒரு ஜென்டில்மேன் என்று கன்னட நடிகர் கிச்சா சுதீப் கூறியுள்ளார். இந்த புகழ்ச்சி விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
சிம்பு தேவன் இயக்கும் புதிய படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இது விஜய்யின் 58 வது படமாகும். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா நடிக்கின்றனர். மேலும், நடிகை ஸ்ரீதேவியும், கன்னட நடிகர் சுதீப்பும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முக்கிய பாடல் காட்சியுடன் சென்னையில் இரு தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் விஜய், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் கலந்து கொண்டு நடனமாடியுள்ளனர். இதுகுறித்து சுதீப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

என்ன அழகு… என்ன அழகு….
மிகவும் அழகான, அற்புதமான நடிகை ஸ்ரீதேவியின் வருகையால் செட்டில் உள்ள அனைவருமே மயங்கி கிடக்கிறோம்.

காந்தம் போல…
அவருடைய நடிப்பை பார்க்கும் அனைவரையும் அவர் ஈர்த்துக் கொள்வார் என்று ஸ்ரீதேவி குறித்து கூறியுள்ளார் சுதீப்.

செல்ஃபி வித் விஜய்
விஜய் உடன் தான் எடுத்த செல்ஃபி படத்தை போஸ்ட் செய்துள்ள சுதீப், விஜய் ஒரு ஜென்டில்மேன். அவரும் நானும் ஒன்றாக நடனமாடினோம். அப்படித்தான் எங்களது படப்பிடிப்பு தொடங்கியது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரே ஜாலிதான்
அது மிகவும் ஜாலியாக இருந்தது. அவருடைய உபசரிப்பு மிகவும் அருமையாக இருந்தது என்று கூறினார்.

ஜென்டில்மேன் விஜய்
நடிகர் சுதீப் விஜய்யை ‘ஜென்டில்மேன்' என்று புகழ்ந்தது அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

லிங்காவை முந்திருச்சாமே
லிங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. எனவே அவரது ரசிகர்கள் இதை டிரெண்டாக்கினார்கள். ஆனால் சுதீப், விஜய்யை புகழ்ந்த "ஜென்டில்மேன், இளையதளபதி" ஆகிய இரண்டு வார்த்தைகளும் ‘லிங்கா' டிரெண்டிங்கை பின்னுக்குத் தள்ளி விட்டு இந்திய அளவில் டிரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடம் பிடித்ததாம்.


Click it and Unblock the Notifications











