'என் பாத்ரூமில் தங்கத்தில் செய்யப்பட்ட தொட்டி இருக்கிறது.. ஏன்னா நான் ஒரு கிங்'! - ஷாரூக்
மும்பை: என் வீட்டு பாத்ரூமில் தங்கத்தால் செய்யப்பட்ட தொட்டி (பாத் டப்) இருக்கிறது என நடிகர் ஷாரூக்கான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவர் ஷாரூக். பாட்ஷா ஆப் பாலிவுட் என்றும், கிங் கான் என்றும் செல்லமாக அழைக்கப்படும் அவரது படங்கள் பிரமாண்ட வெற்றியைப் பெற்று வருகின்றன.

சாதனை
சினிமா துறையில், நடிப்பிலும் சினிமா வர்த்தகத்திலும் இனி புதிதாக சாதிக்க ஒன்றுமில்லை எனும் அளவுக்கு பல சாதனைகள் படைத்தவர் ஷாரூக்கான். சினிமா தாண்டி, விளையாட்டுத் துறையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வாங்கி, மேலும் பல கோடிகளைக் குவித்து வருகிறார்.

கஷ்டங்கள்
தன் வாழ்க்கையின் ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டவர் ஷாரூக். தந்தையும் தாயும் நல்ல வேலைகளில் இருந்தும்கூட, ஒரு சினிமா பார்க்கக் கூட பணமில்லாத அளவுக்கு குடும்பப் பொருளாதாரம் மோசமாக இருந்ததாம்.

வாய்ப்புகள்
பின்னாளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது, அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட ஷாரூக், கிடைத்த அத்தனைப் படங்களிலும் நடித்தார். காரணம், வாய்ப்பு கிடைக்கும்போதே சம்பாதித்துவிட வேண்டும் என்பதால்தான்.

வீட்டுக்குள் தியேட்டர்
பணம் இல்லாததால் தன்னால் தியேட்டரின் உள்ளே சிறுவயதில் செல்ல முடியவில்லை என்ற பாதிப்பு இப்போதும் ஷாருக்கான் மனதில் இருக்கிறது. அதனால்தான் மும்பையில் இருக்கும் ஷாருக்கானின் மிகப்பெரிய பல மாடி பங்களாவில் சினிமா பார்ப்பதற்கென்றே தனியாக ஒரு மினி தியேட்டர் உள்ளது.

தங்கத் தொட்டி
அதுமட்டுமல்ல, ஷாரூக்கானின் பாத்ரூமில் தங்கத்தினால் செய்யப்பட்ட குளியல் தொட்டியும் உள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் பணத்தையும், புகழையும் அடையவேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது என் பாத்ரூமில் தங்கத்தில் செய்யப்பட்ட தொட்டி இருக்கிறது. காரணம் நான் ‘கிங்' என்பதை நீங்கள் மறந்துவிடவேண்டாம்," என்கிறார் ஷாரூக்.


Click it and Unblock the Notifications











