தொழில்நுட்பம் தெரியாத நான் கோச்சடையானில் நடித்தது கடவுளின் செயல்தான் - சூப்பர் ஸ்டார் ரஜினி
மும்பை: "எனக்கு தொழில்நுட்பம் தெரியாது. ஆனால் இந்தியாவிலேயே முதல் முறையாக புதிய தொழில்நுட்பத்தில் வெளியாகும் கோச்சடையானில் இடம்பெற்றதை கடவுளின் செயலாகத்தான் பார்க்கிறேன்," என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
மும்பையில் நடந்த கோச்சடையான் படத்தின் இந்தி பதிப்பு டிரைலர் வெளியீட்டு விழாவில், ரஜினிகாந்த் பேசியதாவது:

கடவுள் செயல்
எனக்கு தொழில்நுட்பம் எதுவும் தெரியாது. ஆனால் இந்தியாவிலேயே முதல் முறையாக மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் தயாராகும் கோச்சடையானில் இடம்பெற்றுள்ளேன். இதை கடவுளின் திட்டமாகத்தான் பார்க்கிறேன்.

சவால்
கோச்சடையான் எனக்கு சவாலாக இருந்தது. ஆனால் நல்ல அனுபவத்தைக் கொடுத்தது. பல நடிகர்களின் பங்களிப்பு இந்தப் படத்தில் உள்ளது.

பெருமை
இந்த படத்தை இயக்கிய எனது மகளை ஒவ்வொருவரும் பாராட்டுகிறார்கள். இதை நினைத்து மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
சவுந்தர்யா சிறுவயதிலே ‘அமர் சித்ரா' கதை மீது மிகவும் ஆர்வம் கொண்டு அதை படித்தார். அது பற்றி படம் எடுக்க விரும்பினார். கோச்சடையான் படத்தை ரசிகர்கள் விரும்புவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

கார்ட்டூன் படமா?
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா பேசுகையில், ‘‘கோச்சடையான் படத்தின் மூலம் எனது கனவு திட்டத்தை அனைவருக்கும் சமர்பிக்கிறேன். பெரும்பாலும் ஹாலிவுட் படங்களில் உள்ள தொழில் நுட்பத்தை இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளோம். இது ஒரு கார்ட்டூன் படம் அல்ல. அனிமேஷன் படம்.

தொழில்நுட்பம் புரியவில்லை
துரதிருஷ்டவசமாக அனிமேஷன் தொழில்நுட்பம் இங்கு புரிவதில்லை. அனிமேஷன் தொழில்நுட்பத்தில் முதல் பயணமாக இது அமையும். அனைவரும் இந்தப் படத்தை விரும்புவார்கள்.. கோச்சடையானுக்குப் பிறகு ஒரு புதிய களம், சந்தை சினிமாவில் உருவாகும்,"என்றார்.


Click it and Unblock the Notifications











