குப்பத்து ஜனங்களின் கல்வி குறித்து பேசும் கோடியில் ஒருவன்!

சென்னை: விஜய் ஆண்டனியின் திரைப் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று பெற இப்பொழுது மெட்ரோ புகழ் ஆனந்த கிருஷ்ணன் உடன் இணைந்து கோடியில் ஒருவன் என்ற படத்தில் நடித்து உள்ளார்.

கட்டிக் கொள்ளாதே அட்டகாசமான நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்து இப்போது நடிகராக கலக்கிக் கொண்டுள்ளார்.

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இப்பொழுது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் கோடியில் ஒருவன் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில் இப்படம் குப்பத்து ஜனங்களின் கல்வி குறித்த முக்கிய படமாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

ஹீரோ அவதாரம்

ஹீரோ அவதாரம்

ஆட்டம் போடவைக்கும் துள்ளல் இசையின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருந்த விஜய் ஆண்டனி நான் படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார் முதல் படமே சிக்ஸர் அடித்ததுபோல மாபெரும் வெற்றி பெற தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். நடிக்கும் ஒவ்வொரு கதைகளிலும் சமூகத்தில் தேவையான அழுத்தமான பிரச்சனைகளை சொல்லி வரும் விஜய் ஆண்டனி அதை இன்று வரை ஒவ்வொரு படங்களிலும் பின்பற்றி வருகிறார். தமிழரசன், அக்னிசிறகுகள், கோடியில் ஒருவன், பிச்சைக்காரன் 2 என தொடர்ந்து விஜய் ஆண்டனிக்கு படங்கள் ரிலீசாக காத்துக் கொண்டிருக்க இதில் கோடியில் ஒருவன் படத்தை மெட்ரோ படப் புகழ் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

கண்ணகி நகரில்

கண்ணகி நகரில்

முழுக்க முழுக்க சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் எடுக்கப்பட்டு வந்த இதன் படப்பிடிப்பு சென்ற ஆண்டு பெய்த மழைக்கு மத்தியிலும் சென்னையில் உள்ள கண்ணகி நகரில் உள்ள ஹவுசிங் போர்டில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது . விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா இதில் நடித்துள்ளார். மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஆத்மிகா அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வந்தாலும் நரகாசுரன், காட்டேரி என இரண்டு திரைப்படங்களும் இன்றுவரை ரிலீசாகாமல் உள்ளது. அடுத்ததாக விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்துள்ள கோடியில் ஒருவன் திரைப்படம் நடிகை ஆத்மிகா வுக்கு அடுத்ததாக ரிலீசாக உள்ளது. இப்படம் ஆத்மிகாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக விஜய் ஆண்டனி மற்றும் ஆத்மிகா இருவரும் இணைந்து நடிக்க இப்படத்தில் பல நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளில் இருவரும் பட்டையை கிளப்பி உள்ளனர். டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் விஜய் ஆண்டனி செம ஸ்டைலிஷான ஆக்ஷன் ஹீரோவாக சண்டைக் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்து உள்ளார்.

டியூஷன் வாத்தியாரா

டியூஷன் வாத்தியாரா

படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி நடிக்கும் விஜய் ஆண்டனி இப்படத்தில் டியூஷன் மாஸ்டராக நடித்துள்ளார். ஹவுசிங் போர்டில் வாசிக்கும் குழந்தைகளின் எதிர்கால கல்வி மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்க அவர்களுக்கு இலவசமாக பாடம் சொல்லிக்கொடுக்கும் டியூஷன் வாத்தியாராக விஜய் ஆண்டனி வருகிறார். அது பிடிக்காத ரவுடி கும்பல் விஜய் ஆண்டனிக்கு கொடுக்கும் தொல்லைகளும் அதிலிருந்து விஜய் ஆண்டனி எப்படி எதிரிகளை துவம்சம் செய்து சமாளிக்கிறார் என்பது பற்றிய ஆக்சன் படமாக உருவாகி உள்ளது குறிப்பாக குப்பத்து ஜனங்கள் கல்வியால் உயரவேண்டும் என்ற ஆணித்தரமான கருத்து படத்தின் மூலம் சொல்ல வருகின்றனர். டியூஷன் மாஸ்டராக வரும் விஜய் சேதுபதி அதேசமயம் இப்படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸ்

செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸ்

மெட்ரோ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் இப்படத்தை இயக்கி வருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்க இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சென்ற ஆண்டு மே மாதமே வெளியாகயிருந்த இப்படம் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தமிழக அரசு 50 சதவீத இருக் கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என அறிவித்திருந்தது. அதன்படி திரைப்படங்கள் ஒவ்வொன்றாக திரையரங்குகளில் வெளியாகி வர கோடியில் ஒருவன் படம் இப்பொழுது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதன்படி படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்து இருந்தது. அதில் இப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குப்பத்து ஜனங்களின் கல்வி

குப்பத்து ஜனங்களின் கல்வி

அழுத்தமான கதைகளில் நடிக்கும் விஜய் ஆண்டனியின் திரைப்படங்களுக்கு என்றே பெரும் ரசிகர்கள் கூட்டம் இங்கு இருக்க தமிழை தொடர்ந்து இவரது திரைப்படங்கள் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் தெலுங்கில் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற நிலையில் இவரின் ஒவ்வொரு படங்களும் தெலுங்கில் டைப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. இந்த நிலையில் கோடியில் ஒருவன் திரைப்படமும் தெலுங்கில் வெளியாக உள்ளது. தனது ஒவ்வொரு படங்களின் மூலமும் சமூகத்திற்குத் தேவையான அழுத்தமான பிரச்சனைகளை பதிவிட்டு வரும் விஜய் ஆண்டனி இப்படத்தில் குப்பத்து ஜனங்களின் கல்வி குறித்து உரைக்கப் பேச உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X