மியூசிக்கும் தெரியாது …. நடிக்கவும் வராது… உணர்ச்சி பொங்க பேசிய விஜய் ஆண்டனி !
சென்னை : விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
இப்படத்தில் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டுபேசிய விஜய் ஆண்டனி மனம் திறந்து சுவாரசியமாக பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன், இயக்குனர் சசி, கமல் போஹ்ரா, தனஞ்செயன், பங்கஜ் போஹ்ரா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இசையமைப்பாளராக
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. புதுவிதமான ஒலிகள், ஆட்டம்போட வைக்கும் மெட்டுக்கள் என இருந்த அந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. தொடர்ந்து டிஷ்யூம், நான் அவனில்லை, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் விஜய் ஆண்டனியின் பாடல்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன.

நடிகராக
இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி நான் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக புதுமுகம் காட்டினார். ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைத்த த்ரில்லர் படமான நான் விமர்சகர்களின் பாராட்டையும் வணிக வெற்றியையும் பெற்றது. அந்த படத்தின் வெற்றியை அடுத்து, சலீம் திரைப்படத்தில் நடித்தார் அந்த படமும் செம ஹிட்.

நல்ல வரவேற்பு
இதையடுத்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது இவர், இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் கோடியில் ஒருவன் படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.இப்படம் செப்டம்பர் 17ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இசை அறிவு இல்லை
இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டுபேசிய விஜய் ஆண்டனி எனக்கு படிப்பு மேல விருப்பம் இல்லை, அம்மாவை ஏமாற்ற சும்மா சினிமாக்கு போறேன் என்று சொல்வேன். ஆனால் எனக்கு இசை அறிவு சுத்தமாக கிடையாது... ஒழுங்கா நடிக்கவும் தெரியாது... வசனத்தைக்கூட சரியாக பேச தெரியாது. ஆனால், வராததை மீண்டும் மீண்டும் முயற்சி செய்து இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன் என்றார் விஜய் ஆண்டனி.

உணர்ச்சி வயப்பட்டு பேசினார்
மேலும் பேசிய அவர், தன்னுடைய திரைப்படங்கள் வெற்றி பெற இயக்குனர்களும், அவர்களுடைய கதையும், அவர்களின் கடுமையான உழைப்பும்தான் காரணம் என்றார். அதேபோல் பலரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து, அவர்களை மக்களிடையே கொண்டுசென்று சேர்த்த மிகப்பெரிய ஆட்கள் பத்திரிக்கையாளர்கள். அவர்கள் முன்னால் நின்று பேசுவது தன் அம்மா செய்த புண்ணியம் என்று விஜய் ஆண்டனி உணர்ச்சி வயப்பட்டு பேசினார்.

பிச்சைக்காரன்2
பிச்சைக்காரம் வெற்றி பெற்றதை அடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய சசி, வேறு படவேலைகளில் பிசியாக இருப்பதால், பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி இயக்க உள்ளார். இப்படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தை விஜய் ஆண்டனி இயக்குவதோடு மட்டுமல்லாமல் நடிப்பு, இசை, படத்தொகுப்பு, தயாரிப்பு உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்கிறார்.


Click it and Unblock the Notifications











