என்னை ‘கொலைவெறி’ துரத்துகிறது. இனி, அப்படி பாட மாட்டேன்: தனுஷ் அறிவிப்பு
மும்பை: 'ஒய் திஸ் கொலைவெறி' எனக் கேட்டு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான பாடலைப் பாடிய தனுஷ், இனி அத்தகைய பாடல்களைப் பாட மாட்டேன் என அதிர்ச்சி ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார்.
'3' திரைப்படத்தில் வரும் ' ஒய் திஸ் கொலைவெறி' பாடலை எழுதி, பாடியும், நடித்தும் இருந்தார் தனுஷ். இப்பாடலுக்கு இசை அனிருத். இப்பாடல் மூலம், தனுஷ் பிரதமர் வீட்டில் விருந்து சாப்பிடும் அளவிற்கு புகழ் பெற்றார். சக்கைப்போடு போட்ட இதுபோன்ற பாடலை இனி பாடப் போவதில்லை என அறிவித்திருக்கிறார் தனுஷ்.
தனுஷ் தற்போது, 'ராஞ்சனா' என்ற இந்தி படத்தில் நடித்து உள்ளார். அதில், சோனம் கபூர் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். தனுஷின் இந்தி அறிமுகப்படமான 'ராஞ்சனா' இன்று வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. இப்படம் தமிழில் 'அம்பிகாபதி' என்ற பெயரில் வெளியாகிறது.
இப்படம் குறித்து நடிகர் தனுஷ் கூறியதாவது....

நடிக்க நேரம் போதவில்லை....
இந்தி பட வாய்ப்புக்காக நான் தேடவில்லை. எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்தி தெரியாதது மற்றும் புதுமுகம் என்ற பிரச்சினைகளுக்காக நான் ஒருபோதும் கவலைப்பட்டது இல்லை. எனக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை என்பது தான் முக்கிய பிரச்சினை.

கதை கவர்ந்ததால் நடித்தேன்...
நான் இந்தி படத்தில் நடிக்க தயாராக இருக்கவில்லை. ஆனால் கதை என்னை கவர்ந்து விட்டது. இதனால் இந்த படத்தில் மகிழ்ச்சியுடன் நடிக்க ஒப்பு கொண்டேன். எனக்கு அதிகம் இந்தி தெரியாது.

மொழி பிரச்சினையில்லை....
இந்தி தெரிந்து இருந்தால் நடிக்க கூடுதல் வசதியாக இருந்திருக்கும். இந்தி படிக்க நான் வகுப்பு எதற்கும் செல்லவில்லை. இதற்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை. மொழி பிரச்சினையில் இயக்குனரும், கதாசிரியரும் எனக்கு உதவினர்.

துரத்தும் கொலைவெறி...
'3' தமிழ் படத்தில் நான் நடித்து பாடிய பாடல் 'கொலவெறிடி'. இந்த பாடல் என்னை மனவருத்தமடைய செய்து விட்டது. என்னை துரத்த தொடங்கி விட்டது.

இனி, இதுபோன்று பாட மாட்டேன்...
நான் எங்கு சென்றாலும், இதை பற்றி தான் பேசுகிறார்கள். இதில் இருந்து நான் வெளிவரவே விரும்புகிறேன். இதுபோன்ற பாடல்களை இனி பாட விரும்பவில்லை' எனத் தெரிவித்துள்ளார் தனுஷ்.


Click it and Unblock the Notifications











