Don't Miss!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Finance
இந்தியாவை விட இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசத்தில் பெட்ரோல் விலை குறைவு.. ஆய்வறிக்கை வெளியீடு!
- News
கனமழை வெளுத்து வாங்க போகுது! பெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்! கவனமாக இருங்க மக்களே..!
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
துப்பிருந்தா நீ போய் கேளு... கோவத்தில் கொந்தளித்த சித்தார்த்... என்ன நடந்தது?
சென்னை : நீட் தேர்வு குறித்து ட்விட்டரில் சித்தார்த்தை வம்புக்கு இழுத்த நெட்டிசனுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் சித்தார்த்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சித்தார்த், சமூக பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து தன்னுடைய கருத்துக்களை தன் ட்விட்டர் பக்கத்தில் துணிச்சலுடன் பதிவிடுவார்.
தலைவி படத்துல நிறைய மிஸ்டேக்ஸ் இருக்கு.. பல விஷயங்களை மாத்திட்டாங்க.. கொதிக்கும் ஜூனியர் எம்ஜிஆர்!
இதனால், சித்தார்த் குறித்த பல அவதூறு கருத்துக்கள் இணையத்தில் அவ்வப்போது வலம் வரும்

பாய்ஸில் அறிமுகம்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் சித்தார்த். இதையடுத்து, ஆயுத எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, உதயம் என்எச்4, ஜிகர்தண்டா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். உணவு பொருள் கலப்படம் குறித்து இவர் நடித்த அருவம் திரைப்படம் மிகப்பெரிய விழிப்புணர்வு திரைப்படமாக அமைந்தது.

பாலிவுட்டில்
தெலுங்கில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்த சித்தார்த், அடுத்து ரங் தே பசந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார் நடிகர் சித்தார்த்.

இந்தியன் 2வில்
கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு சிவப்பு மஞ்சள் பச்சை என்ற திரைப்படம் வெளிவந்தது அதன் பிறகு சித்தார்த்தின் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. தற்போது மகா சமுத்திரம் என்ற படத்தில் நடித்து வருகிறார் சித்தார்த். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் உடன் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார் சித்தார்த்.

நீட்_ரத்து_எங்கடா
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகர் சித்தார்த் தொடர்ந்து மத்திய அரசை குற்றம்சாட்டி பல ட்வீ ட்களை பகிர்ந்துள்ளார். இதனால்,இணையவாசிகள் இவரை விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது ஒரு இணையவாசி, நடிகர் சித்தார்த்தை டேக் செய்து நீட் தேர்வு நேற்று நடந்தது பற்றி கேள்வி எழுப்பி இருந்தார்.
நீட் தேர்வை முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே ரத்து செய்வோம்

இன்று நீட் நடக்கிறது
பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் -
Actor_Siddharth
ஐயா சித்தார்த் என்ன பண்ண போறீங்க ?
#நீட்_ரத்து_எங்கடா என்று கேட்டு இருந்தார்.

துப்பிருந்தா போய் நீ கேளு
இதைபார்த்து கடுப்பான சித்தார் அந்த நபருக்கு சரியான பதிலடி கொடுத்து ட்வீ ட் பதிவிட்டுள்ளார்.
மூதேவி, கோவமோ சந்தேகமோ வந்தா, துப்பிருந்தா போய் நீ கேளு. இல்லை உங்க அப்பன போய் கேளு,
நான் என் வேலைய தாண்டா பாக்குறேன்,
பொறுக்கி பசங்க. இதுவே வேலையா போச்சு,
டிவிட்டர டாய்லெட்டாக்கி வச்சிருக்கீங்க. வேற எங்க மலரும்? சாக்கடையில் தான் மலரும், எழவு.
இந்தியில சொல்லட்டா?' என கடுங்கோபத்துடன் பதிவிட்டுள்ளார். இணையத்தில் இந்த ட்வீ ட் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

RIP Siddharth
அதேபோல சமீபத்தில் நெட்டிசன் ஒருவர் RIP Siddharth என குறிப்பிட்டு அழும் ஈமோஜியுடன் அவரது போட்டோவை ஷேர் செய்திருந்தார் இந்த பதிவை பார்த்த நடிகர் சித்தார்த் இந்த ட்வீட் மற்றும் பதில்கள். இந்த நாட்களில் எதுவும் நம்மை ஆச்சரியப்படுத்தக்கூடாது என்று நினைக்கிறேன். நான் வாயடைத்துவிட்டேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.