twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதான் சென்சார் ஓகே சொல்லிருச்சுல, அப்புறம் ஏன் இந்த கூப்பாடு?: விஷால் நறுக்

    By Siva
    |

    சென்னை: சர்கார் பிரச்சனை தொடர்பாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்து திரையுலக பிரபலங்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.

    சர்கார் பட பிரச்சனை பெரிதாகிக் கொண்டிருக்கிறது. இரவு நேரத்தில் போலீசார் வந்து தன் வீட்டுக் கதவை தட்டியதாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

    மேலும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார் அவர். இந்நிலையில் அவருக்கு திரையுலகினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    Exclusive : கேரக்டருக்காக எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம்: நடிகை அதிதி மேனன்Exclusive : கேரக்டருக்காக எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம்: நடிகை அதிதி மேனன்

    கூப்பாடு

    இயக்குனர் முருகதாஸ் வீட்டில் போலீசா???? எதற்காக? எதுவும் அசம்பாவிதம் நடக்காது என்று நம்புகிறேன். மீண்டும். சென்சார் படத்திற்கு ஒப்புதல் அளித்து மக்கள் பார்த்துள்ளனர். அப்படி இருக்க இந்த கூப்பாடு ஏன் என்று கேட்கிறார் விஷால்.

    சீனு ராமசாமி

    தணிக்கை குழு தணிக்கை செய்த திரைப்படத்தை தணிக்கை செய்ய நினைப்பது சட்டப்படி குற்றம்.பின்பு நீக்கப்பட்ட காட்சிகளுடன் மறு தணிக்கை செய்து தான் படத்தை வெளியிட வேண்டும்,இதுதான் நடைமுறை,

    ஆகவே எவருக்கும் எந்த அமைப்புக்கும் காட்சிகளை நீக்கும் அதிகாரமில்லை.#சர்க்கார் என்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.

    ரஞ்சித்

    #சர்கார் விமர்சனத்தை எதிர்க்க அரசதிகாரத்தையும், வன்முறையையும் கையாளுபவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது, இந்த நாட்டில் என்றோ "ஜனநாயகம்" அழிந்து/இழந்து போய்விட்டது என்று!!! என இயக்குனர் பா. ரஞ்சித் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    கமல்

    முறையாகச் சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப் போகும் நல்லவர் கூட்டமே வெல்லும் என்கிறார் கமல் ஹாஸன்.

    ரஜினி

    தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

    ஜி.வி. பிரகாஷ்

    தணிக்கை குழு தணிக்கை செய்த திரைப்படத்தை தணிக்கை செய்ய நினைப்பது சட்டப்படி குற்றம். எதற்காக சென்சார் உள்ளது ? என்று கொந்தளித்துள்ளார் ஜி.வி. பிரகாஷ். #sarkar

    English summary
    Kollywood celebs have joined hands for Sarkar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X