விஜய்யால் இனி அது முடியவே முடியாது.. ரஜினியால் மட்டுமே சாத்தியம்.. அதுவும் இந்த வருஷமே நடக்குமா?

சென்னை: தமிழ் சினிமாவில் பல பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முதன் முதலில் செய்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அவரது படங்களை பார்த்து வளர்ந்த விஜய் அவரை போலவே சினிமாவிலும் முன்னணி நடிகராக மாறினார்.

ரஜினிகாந்த் vs கமல்ஹாசன் மற்றும் விஜய் vs அஜித் பாக்ஸ் ஆபீஸ் கிளாஷ் இருந்த நிலையில், அது படிப்படியாக மாறி ரஜினிகாந்த் vs விஜய் என்கிற நிலைக்கு சமீப காலமாக வந்து விட்டது.

Kollywood s 1000 Crore Dream Can Rajinikanth Deliver What Vijay Couldn t Before Retirement

கடந்த 2023ம் ஆண்டு ஜெயிலர் மற்றும் லியோ என 2 படங்களும் அதிகபட்சமாக 600 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தமிழ் சினிமா இன்னமும் 1000 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூலை எட்ட முடியாமல் திணறி வருகிறது.

மிஸ்ஸான சாதனை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படமே 2ம் பாதி சிறப்பாக இருந்திருந்தால் 1000 கோடி வசூலை ஈட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த படம் அந்த சாதனையை தவறவிட்டது. ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி என மல்டி ஸ்டார்கள் நடித்த நிலையில், அந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அது ஜெயிலர் அளவுக்கு கூட வசூல் செய்யவில்லை. கடந்த ஆண்டு லோகேஷ் இயக்கத்தில் ரஜினி, அமீர்கான், நாகார்ஜுனா, செளபின் சாஹீர், உபேந்திரா, சத்யராஜ் நடித்த கூலி திரைப்படமும் 1000 கோடி வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படமும் 500 கோடி மட்டுமே வசூல் செய்து கோட்டை விட்டது.

Kollywood s 1000 Crore Dream Can Rajinikanth Deliver What Vijay Couldn t Before Retirement

விஜய்யால் இனி முடியாது: இந்த ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் ஜனநாயகன் திட்டமிட்டபடி 10 நாட்கள் பொங்கல் விடுமுறையை டார்கெட் செய்து வெளியாகி இருந்தால், மலேசியாவில் நடைபெற்ற ஆடியோ லான்ச் வைப் உடன் சேர்ந்து படம் கண்டிப்பாக நல்லா இருக்கும்பட்சத்தில் 1000 கோடி வசூலை ஈட்டி தந்திருக்கும் என பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், தற்போது ஜனநாயகன் படம் வெளியாவதே கேள்விக்குறியாக மாறியுள்ள நிலையில், விஜய்யால் இனி 1000 கோடி பாக்ஸ் ஆபீஸ் சாதனையை கோலிவுட்டுக்கு கொண்டு வர முடியாது என்கின்றனர்.

சூப்பர் ஸ்டாரால் மட்டுமே சாத்தியம்: நெல்சன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியாக உள்ள ஜெயிலர் 2 நிச்சயம் அந்த சாதனையை படைக்கும் என்கின்றனர். ஜெயிலர் 2 திரைப்படம் 800 கோடியளவுக்கு மட்டுமே வசூல் ஈட்டினால் கூட அடுத்து நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் படம் கண்டிப்பாக கோலிவுட்டை 1000 கோடி கிளப்பில் இணைக்கும் என்கின்றனர். சூப்பர் ஸ்டாரை தவிர்த்து இப்போதைக்கு தமிழ் சினிமாவில் வேறு எந்தவொரு நடிகராலும் 1000 கோடி வசூல் சாதனையை படைக்கவே வாய்ப்பு இல்லை ராஜா என பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி படங்கள் அந்த சாதனையை அசால்ட்டாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர்களை தாண்டி இயக்குநர்கள் கைகளில் தான் அந்த மேஜிக் இருக்கு என்பது தான் நிதர்சனம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X