சிங்கத்துக்கு கொம்பு வெச்சு பார்த்திருக்கீங்க... இங்க பாருங்க இவங்க காட்டுறாங்க!

சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம் திரைப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டது

சென்னை: நடிகர் சசிகுமார் நடிக்கும் கொம்பு வச்ச சிங்கம் திரைப்படம் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டதாம்.

சுந்தரபாண்டியன் திரைப்பட இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிவரும், திரைப்படம் கொம்பு வச்ச சிங்கம். கிராமத்து பின்னணி கொண்ட படமாக தயாராகிவரும் இத்திரைப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

Kombu Vacha singam based on a true incidents!

மதுரை அருகே உள்ள கிராமத்தில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாராகிவருகிறது.

இப்படத்தில் மகேந்திரன், சூரி, ஹரிஷ் பரேடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் மற்றுமொரு முன்னணி நடிகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

சுந்தரபாண்டியன் படம் போலவே நண்பர்களுக்கும் குடும்ப உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இது இருக்கும். 90 களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாராகிறது என இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தற்போது முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளனர். அடுத்ததாக காரைக்குடி, பொள்ளாச்சி மற்றும் தென்காசி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். சசிகுமார் இப்போது ரஜினிகாந்தின் "பேட்ட" திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X