ஒரே நாளில் இருபடங்கள் ரிலீஸ்... சசிகுமார் ரசிகர்கள் ஹேப்பி!
சென்னை : சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படமும், ராஜவம்சமும் ஒரே நாளில் திரையரங்கில் வெளியாக உள்ளது.
டைரக்டர், நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பலமுகங்களைக் கொண்டவர் சசிக்குமார்.
முதல் படமான சுப்ரமணியபுரம் படத்திலேயே மாஸ் வெற்றி, தரமான காதல் கதையை சொல்லி தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார் சசிகுமார்.

எம்.ஜி.ஆர் மகன் ஓடிடியில்
அசிஸ்டென்ட் டைரக்டராக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த சசிகுமார், 13 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முக்கியமான ஹீரோ, முக்கியமான டைரக்டர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். பகைவனுக்கு அருள்வாய், எம்.ஜி.ஆர்.மகன், கொம்பு வச்ச சிங்கமடா , ராஜவம்சம், நா நா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் எம்.ஜி.ஆர்.மகன் தீபாவளி அன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

நவம்பர் 26ம் தேதி
அதே போல, கொம்புவச்ச சிங்கமடா திரைப்படமும், நவம்பர் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் நடிகை மடோனா செபாஸ்டின் கதாநாயகியாக நடித்துள்ளார். சூரி, மறைந்த இயக்குனர் மகேந்திரன், ஹரிஷ் பெறடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் N.K.ஏகாம்பரம் ஒளிப்பதிவில், திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள கொம்புவச்ச சிங்கமடா படத்திற்கு வி.டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்துள்ளார்.

ராஜவம்சம்
இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ராஜவம்சம். இத்திரைப்படமும் நவம்பர் 26-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதில், யோகிபாபு மற்றும் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒரே நேரத்தில்
சகிக்குமார் நடித்த உடன்பிறப்பே ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல எம்.ஜிஆர் மகனும் தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாக உள்ளது. தற்போது கொம்பு வச்ச சிங்கமடா மற்றும் ராஜவம்சம் திரைப்படமும் நவம்பர் 26ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. சசிக்குமாரின் இரு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாவது இதுவே முதன்முறை ஆகும்.


Click it and Unblock the Notifications











