விஜய்யுடன் சிவகார்த்திகேயன் மோதும் போது.. நான் மோதக்கூடாதா?.. கேபிஒய் பாலாவுக்கு செம தில் தான்!
சென்னை: துப்பாக்கி கொடுத்த விஜய்யுடனே நடிகர் சிவகார்த்திகேயன் மோத தயாராகி விட்ட நிலையில், விஜய் டிவியில் இருந்து வந்த கேபிஒய் பாலா அதே விஜய் டிவியில் இருந்து வந்து பெரிய ஹீரோவாக மாறியுள்ள சிவகார்த்திகேயன் உடனே முதல் படத்திலேயே மோதுவது கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி விஜய்யின் கோட் திரைப்படம் வெளியானது. இந்நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் வெளியாகிறது.

இந்நிலையில், அந்த படத்துக்குப் போட்டியாக கேபிஒய் பாலா ஹீரோவாக அறிமுகமாகும் காந்தி கண்ணாடி படமும் அதே செப்டம்பர் 5ம் தேதியே வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
ரியல் ஹீரோ டு ரீல் ஹீரோ: விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் சிவகார்த்திகேயன் எப்படி கலக்கி கோலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக மாறியுள்ளாரோ அதே போல விஜய் டிவியில் இருந்து வந்த கவினும் ஹீரோவாக அசத்தி வரும் நிலையில், அடுத்ததாக கேபிஒய் பாலாவும் ஹீரோவாக காந்தி கண்ணாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். ரீல் ஹீரோவாக அவர் ஆவதற்கு முன்பாகவே இல்லாதவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து ரியல் ஹீரோவாகவே வலம் வரும் நிலையில், அவரது முதல் படத்தை நிச்சயம் பார்த்து ரசிகர்கள் தங்கள் ஆதரவை தருவார்கள்.
காந்தி கண்ணாடி ரிலீஸ் தேதி: வைபவ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ரணம் படத்தை இயக்கிய இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் கேபிஒய் பாலா, இயக்குநர் பாலாஜி சக்திவேல் நடிப்பில் உருவாகியுள்ள காந்தி கண்ணாடி திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது.
சிவகார்த்திகேயனுடன் நேரடி மோதல்: விஜய்யின் ஜன நாயகன் படத்துடன் சிவகார்த்திகேயனின் பராசக்தி பொங்கலுக்கு மோதப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துடன் நேரடியாக கேபிஒய் பாலா தனது காந்தி கண்ணாடி படத்தை இறக்கி மோத காத்திருப்பது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்கள் முடிவு செய்வதில்லை என்றும் ஓடிடி நிறுவனங்கள் தான் முடிவு செய்கின்றன எனக் கூறி வரும் நிலையில், ரெட்ரோவுடன் டூரிஸ்ட் ஃபேமிலி மோதியது போல இந்த மோதல் ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











