ரசிகர்கள் அதிருப்தி - கிரீடம் கிளைமாக்ஸ் மாற்றம்!
ரசிகர்கள் கடும் அஜீத் நடித்துள்ள கிரீடம் படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் சில காட்சிகள் மாற்றப்பட்டு விட்டது. மாற்றப்பட்ட கிளைமாக்ஸுடன் தற்போது படம் ஓடிக் கொண்டுள்ளது.
பழம்பெரும் நடிகர், தயாரிப்பாளர் கே.பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜி தயாரிப்பில் அஜீத், திரிஷா, ராஜ்கிரண் நடிப்பில் வெளியான படம் கிரீடம். மலையாளத்தில் பாலாஜியின் மருமகன் மோகன்லால் நடித்து வெளியான படம்தான் அதே பெயரில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கிரீடம் படம் ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களைக் கவரவில்லை.
மேலும் பத்திரிக்கை விமர்சனங்களிலும் கூட படத்தின் கிளைமாக்ஸ் சரியில்லை என்று கருத்து வெளிப்பட்டது. இதையடுத்து படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்ற இயக்குநர் ஏ.எல். விஜய் திட்டமிட்டார். அதற்கு தயாரிப்பாளர் பாலாஜியும் ஒப்புக் கொண்டார். அதன்படி தற்போது கிளைமாக்ஸ் காட்சி மாற்றப்பட்டு விட்டது.
முதலில் ரவுடியைக் கொலை செய்த குற்றத்திற்காக அஜீத் சிறை செல்வது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அதை மாற்றி விட்டனராம். அதன்படி வில்லனைக் கொல்கிறார் அஜீத். அவரை அந்த வழக்கிலிருந்து காப்பாற்றும் நல்ல இதயம் படைத்த சப் இன்ஸ்பெக்டர் முலம் அஜீத்தைத் தேடி சப் இன்ஸ்பெக்டர் பதவி வருகிறதாம்.
இப்படி மாற்றப்பட்ட கிளைமாக்ஸ் காட்சியுடன் தற்போது கிரீடம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுதவிர வேறு சில காட்சிகளும் கூட மாற்றப்பட்டுள்ளதாம்.
சோக கிளைமாக்ஸ் சந்தோஷ காட்சிகளுடன் மாற்றப்பட்டிருப்பதால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர். இதையடுத்து மறுபடியும் கிரீடத்தைப் பார்த்து சந்தோஷிக்க ஆரம்பித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











