கிருஷ்ணாவின் ‘திரு.குரல்’.. முக்கிய கதாபாத்திரத்தில் மகேந்திரன்!
கிருஷ்ணா நடிக்கும் திரு.குரல் பட பூஜை நடை பெற்றது.
சென்னை : கழுகு - 2' படத்தை தொடர்ந்து திரு.குரல் என்ற படத்தில் நடிக்கிறார் கிருஷ்ணா.
'தீதும் நன்றும்' படத்தை தொடர்ந்து N. H.ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் H.சார்லஸ் இம்மானுவேல் தயாரிக்கும் இரண்டாவது படம் 'திரு.குரல்'. அறிமுக இயக்குனர் பிரபு என்பவர் இயக்கும் இந்த படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. ஆகஸ்ட் 20 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.

கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்திற்கு 'விக்ரம் வேதா' புகழ் சாம். சி.எஸ் இசையமைக்கிறார். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ரமணன் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை - தியாகராஜன், ஸ்டண்ட் - ஹரி, நடனம் - ஸ்ரீ க்ரிஷ்.
இந்த படத்தை விநியோகஸ்தர் சிங்காரவேலன் உலகம் முழுவதும் வெளியிட உள்ளார்.
இப்படத்தின் நாயகி மற்றும் இன்னபிற நடிகர், நடிகையர் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











