ரெஜிஸ்டர் மேரேஜுக்கு பெற்றோரிடம் கையெழுத்து வேண்டும்..நடிகர் ரஞ்சித் பேச்சு!
சென்னை: நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள குழந்தை C/O கவுண்டம் பாளையம் படத்தின் டீசர் வெளியிட்டு விழா கோவையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஞ்சித், இந்த படம் பெண் பிள்ளைகளை பெற்றவர்களின் வலியை சொல்லும் படமாக இருக்கும். இப்படத்தில் நிறைய புது முக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் என்றார்.
நடிகர் ரஞ்சித் கே.எஸ். ராஜ்குமார் இயக்கிய பொன்விலங்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஆர்.கே.செல்வமணி தயாரித்த இந்த படத்தில், ரஹ்மான், சிவரஞ்சனி மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து மைனர் மாப்பிள்ளை, அவதார புருஷன், சேரனின் பாரதி கண்ணம்மா, மறுமலர்ச்சி, தேசிய கீதம் மற்றும் புதுமை பித்தன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நடிகராக இருந்த ரஞ்சித் 2003ம் ஆண்டு பீஷ்மர் படத்தை இயக்கினார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. படத்தின் தோல்வியைத் தொடர்ந்து, பணப்பற்றாக்குறையால் ரஞ்சித்தால் அடுத்த படத்தை இயக்காமல் இருந்த ரஞ்சித் தற்போது, குழந்தை C/O கவுண்டம் பாளையம் படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
குழந்தை C/O கவுண்டம் பாளையம்: இப்படத்தின் டிசர் வெளியிட்டு விழா கோவையில் நடைபெற்றது. இதில் பேசிய, ரஞ்சித், இது நாடக காதலை சொல்லும் படம், பெண் பிள்ளைகளை பெற்றவர்களின் வலியை காட்டும் படம், கொங்கு மக்களின் கலாச்சாரத்தை காட்டும் படம் என்றார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நான் நடித்து இருக்கிறேன். மேலும் பல புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்து இருக்கிறேன். இந்த படம், முழுக்க முழுக்க பெண் குழந்தைகள் பாதுகாப்பை மையமாக கொண்ட படம் என குறிப்பிட்டார்.

என்ன சட்டம் இது: இதையடுத்து செய்தியாளர் ஒருவர், பெண் குழந்தைகளை அரசு பாதுகாக்காதா? ரெஜிஸ்டர் மேரேஜ் செய்தால் போதும் என கேட்க, அதற்கு பதில் அளித்த ரஞ்சித், ஒரு குழந்தையை பள்ளியில் சேர்க்க பெற்றோர் கையெழுத்து வேண்டும், ஆதார் கார்டு இருக்க வேண்டும், கல்லூரிக்கு அனுப்பும் போது பெற்றோர் கையெழுத்து வேண்டும், குழந்தைகளுக்கு பெற்றோர் சொத்தை கொடுக்க கையெழுத்து வேண்டும். ஆனால், ரெஜிஸ்டர் மேரேஜ் செய்யும் போது பெற்றோர் கையெழுத்து தேவைப்படாது, இது என்ன சட்டம்?

சினிமாவில் அரசியல்: தமிழ் சினிமாவில் தற்போது சில ஆண்டுகளாக சாதியை மையமாக கொண்டு சாதியை விற்று சினிமா செய்யும் அரசியல் வந்து இருப்பதை பார்க்க முடிகிறது. இதனால், ரஞ்சித் என் பெண்களை காக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு நாடக காதலுக்கு எதிராக என படமாக இப்படம் இருக்கும், பல ஆண்டுகள் கழித்து இந்த படத்தை இயக்கி இருக்கிறேன். நல்ல படத்தை மக்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.


Click it and Unblock the Notifications











