ஹீரோ .. ஹீரோ ..
சிலம்பரசன் அடுத்து நடிக்கும் படம் குத்து.
பெயரைப் பார்த்தவுடன் பயந்து விடாதீர்கள். தம் படத்தின் வெற்றியின் பாதிப்பால்இப்போதெல்லாம் சிம்புவின் படங்களுக்கு இதுபோலத்தான் வம்பான பெயராக வைக்கிறார்கள்.
தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆக ஓடிய தம் படத்தின் ரீமேக்தான் இந்த குத்து. படத்தின் பெயருக்கேற்பவில்லன்களை கும்மாங்குத்து குத்தும் அதிரடி கேரக்டரில் வருகிறாராம் சிம்பு.
அவருடன் ஜோடி சேருபவர் ரம்யா. தமிழில் கால் பதிப்பதின் மூலம் சினிமாவுக்குள் நுழைகிறார்இந்த ரம்யா.
படத்தை இயக்கப் போவது தம் பட டைரக்டர் வெங்கடேஷ். பிரஷாந்த் நடித்த சாக்லேட் படத்தையும்இவர்தான் இயக்கினார்.
கன்னடத் தயாரிப்பாளரான கே.சி.என். சந்துரு என்கிற சந்திரசேகர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
குத்து வாங்க தயாராவோமா?
More from Filmibeat
cinema gayathiri raghuram karthik kiran kousalya lanka prabhakaran prabhu radha ramanan ramya revathi sham tamil news tamilnadu thatstamil vijay vijay kanth


Click it and Unblock the Notifications











