மகள் வந்தாச்சே.. நடிகையிடம் சந்தோஷத்தில் துள்ளி குதித்த விஜய்.. அவ்வளவு மகிழ்ச்சியாம்

சென்னை: விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திக்கவிருந்த சில மாதங்களுக்கு முன்பு; அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை அவர் முன்வைத்திருந்தார். மேலும் அவரது மகனும், மகளும்கூட விஜய்க்கு எதிரான நிலைப்பாட்டினையே எடுத்திருக்கிறார்கள். பதவியேற்பு விழாவுக்கும் அவர்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சி ஆரம்பித்த விஜய்க்கு அவரது மனைவி சங்கீதா பெரிய அதிர்ச்சியை கொடுத்தார். தேர்தல் நடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த அவர், 'விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டும். அவருக்கும் இன்னொரு நடிகைக்கும் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது' என்று பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அது தமிழ்நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Lakshana Reveals Vijay s Reaction to Daughter Divya Sasha s Birth
Photo Credit:

பிள்ளைகளும் எதிர் நிலையில்?: சங்கீதா அப்படி மனு தாக்கல் செய்ததை அடுத்து; பலரது கவனமும் விஜய்யின் மகன், மகள் பக்கம் சென்றது. இந்த விஷயத்தில் அவர்களது நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி பலரது மூளையை அரித்திருக்கும். அவர்களோ முழுக்க முழுக்க அம்மா பக்கமே இந்த விஷயத்தில் நிற்பது என்று முடிவெடுத்திருப்பதாகவும்; இந்தப் பிரச்னை தொடக்கத்திலிருந்தே அவர்கள் சங்கீதா பக்கம்தான் இருக்கிறார்கள் என்றும் பனையூர் பட்சிகள் கூறின.

Also Read
குஷ்பு மகள் திருமண வேலைகள் களைகட்டுது.. முதலமைச்சர் விஜய்க்கு பத்திரிகை.. கண்டிப்பா வருவாரு!
குஷ்பு மகள் திருமண வேலைகள் களைகட்டுது.. முதலமைச்சர் விஜய்க்கு பத்திரிகை.. கண்டிப்பா வருவாரு!

பட்டமளிப்பு விழாவுக்கு செல்லாத விஜய்?: பிள்ளைகளும் தன் பக்கம் நிற்கவில்லையே என்ற வருத்தத்தில்தான்; மகள் திவ்யா சாஷா வெளிநாட்டில் பட்டம் வாங்கியபோது அந்த நிகழ்ச்சிக்குகூட விஜய் செல்லவில்லை. அவர் ஸ்தானத்தில் ஜேசன் சஞ்சய்தான் சென்று வந்தார் என்றும் சொல்லப்பட்டதுண்டு. அதுமட்டுமின்றி தான் இயக்கும் சிக்மா படத்தின் போஸ்டரில்கூட முதலில் விஜய்யின் பெயரை இனிஷியலுக்கு பயன்படுத்தவில்லை. சங்கீதா பெயரின் முதல் எழுத்தைத்தான் பயன்படுத்தியிருந்தார் ஜேசன் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சரான விஜய்: இந்த விவகாரம் எல்லாம் தேர்தலில் விஜய்க்கு பெரிய பின்னடவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தால்; அப்படியே தலைகீழாக நடந்துவிட்டது. தேர்தலில் வென்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அந்தப் பதவியேற்பு விழாவுக்கு சங்கீதா வராவிட்டாலும் மகளோ, மகனோ வரலாம் என பலர் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் வரவில்லை. இதுகுறித்து இயக்குநர் சமுத்திரகனிகூட, 'முன் வரிசையில் அந்த மூன்று பேர் இல்லாதது வருத்தம்' என அக்கறையோடும், ஆதங்கத்தோடும் பேசியிருந்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.

நடிகையின் ஷேரிங்ஸ்: இந்நிலையில் சிவகாசி படத்தில் விஜய்யோடு நடித்த நடிகை லக்‌ஷனா சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தார். தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "சிவகாசி படத்தில் ஒரு ஷாட்டை வெள்ளிக்கிழமை எடுத்தோம். அந்த நாளில்தான் விஜய்க்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது நான் ஷாட்டில் இருந்தேன். எனது அம்மா வந்து உன்னை விஜய் சார் கேரவனுக்கு கூப்பிடுகிறார் என சொன்னார். நானும் சென்றேன். அவர் கைகளில் லட்டுவை வைத்துக்கொண்டு,'லக்‌ஷனா எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறாள். வெள்ளி கிழமை மகள் பிறந்தால் அதிர்ஷ்டம் என்று தமிழ்நாட்டில் சொல்வார்கள் என கூறினார். இந்த உலகத்தையே அவர் பிடித்தது மாதிரியான சந்தோஷத்தில் இருந்தது. அப்படி ஒரு சந்தோஷத்தில் அவரை அன்றுதான் பார்த்தேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X