அந்த மூணு வருஷம் வாழ்க்கையில் நடக்கக்கூடாது எல்லாம் நடந்துடுச்சி.. விஷ்ணு விஷால் வேதனை!

சென்னை: வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆன விஷ்ணு விஷால் குறகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் நிலையான ஒரு இடத்தை பிடித்தார். தற்போது இவர் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 9ந் தேதி வெளியாக உள்ள நிலையில், யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த இவர் தனது வாழ்க்கையில் கடந்து வந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம்,. இப்படத்தில் ரஜினி மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 9ம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

lal salaam actor vishnu vishal talks about actor soori

நடிகர் விஷ்ணு விஷால் பேட்டி: அதில்,நடிகர் சூரிக்கும் இவருக்கும் பிரச்சனை குறித்து பதில் அளித்த அவர், எனக்கும் சூரிக்கும் இடையே என்ன நடந்தது என்பது சீக்கிரமே வெளி வரும். என்னுடைய வாழ்க்கையில் அந்த மூன்று வருடங்கள் நடக்கக்கூடதது எல்லாம் நடந்து விட்டது. அந்த நேரத்தில் தான் என்னுடைய முன்னாள் மனைவிக்கும் எனக்கும் பிரச்சனை வந்து விவாகரத்தானது. சூரிக்கும் எனக்கும் இடையேயான பிரச்சினை பெரும் சர்ச்சையாக வெடித்தது. எல்லாமே ஒரே நேரத்தில் நடந்தது. எல்லா பிரச்சனையும் ஒண்ணா வரும்ணு சொல்லுவாங்க அப்படித்தான் எல்லாம் எனக்கு ஒண்ணா வந்துச்சு. ஆனால் அது எல்லாமே தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. இங்கு தவறு செய்யாத மனிதர்களை கிடையாது.

நிறைய பேசினோம்: ஆனால் அவர்கள் அந்தளவுக்கு கோபப்படும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய தவறு செய்யவில்லை. தற்போது எல்லாமே முடிவுக்கு வந்திருக்கிறது. தற்போது சூரிக்கும் எனக்கும் இடையேயான பேச்சுவார்த்தை சுமூகமாக இருக்கிறது. நாம் கோபத்தை நம் மனதுக்குள்ளேயே வைத்திருந்தால், அது நம்மை வேறொரு மனிதராக மாற்றி விடும். சூரி உடனான பிரச்சனையில் நானும் அவரும் உட்கார்ந்து நிறைய பேசினோம். அப்போதுதான் எங்கள் இரண்டு பேருக்கும் ஒரு தெளிவு வந்துள்ளது. வாழ்க்கை பற்றிய ஒரு புரிதல் கிடைத்தது. நாங்கள் மறக்கவும் மன்னிக்கவும் கற்றுக்கொண்டோம். கூடிய விரைவில் அவருடன் சேர்ந்து படங்களில் நடிப்பேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X