லால் சலாம்.. மொய்தீன் பாயாக நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். லைகா சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடுகிறது. இப்படம் பொங்கலுக்கு ரிலீசாக இருந்த நிலையில், சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு, வரும் 9ந் தேதி வெளியாக உள்ளது.

ரஜினிகாந்த் பேச்சு: கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு, சென்னையில் நடைபெற்றது, இதில் பேசிய ரஜினிகாந்த், லால் என்றால் சிவப்பு, லால் என்றால் புரட்சி, சலாம் என்றால் வணக்கம், புரட்சி வணக்கம் என்பது தான் இந்த படத்தோட தலைப்பின் அர்த்தம். மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா புரட்சியை கையில் எடுத்திருக்கிறாங்க. லால் சலாம் படத்துக்கான கதையை ஃபர்ஸ்ட் ஐஸ்வர்யா சொல்லும்போது இது கண்டிப்பா தேசிய விருது வாங்கும் அப்படின்னு சொன்னாங்க.
தயாரிக்க முன்வரவில்லை: உடனே நான் விருதெல்லாம் நமக்கு செட் ஆகாது என பேக் அடிச்சுட்டேன். நமக்கு தேவை ரிவார்டு மற்றும் டப்பு தான். அதுக்கப்புறம் முழு கதையும் படிச்ச பிறகு அதில் பெரிய நடிகர் நடிச்சா நல்லாருக்குமுன்னு சொன்னேன். பின்னர் நானே நடிக்கின்றேன்னு சொன்னேன். அந்தளவு அருமையான கதை, ஆரம்பத்தில் சில தயாரிப்பாளர்கள் இதனை தயாரிக்க முன்வரவில்லை. ஆனால் லைகா தமிழ்குமரன் தயாரிக்க முன் வந்தார். இந்த காலத்துக்கு தேவையான அரசியல் கருத்து கொண்ட படமாக லால் சலாம் இருக்கும் என்றார்.
சம்பளம் எவ்வளவு தெரியுமா: இந்த படத்தில், ரஜினிகாந்த் கெஸ்ட் ரோல் என்றாலும் படத்தில் மொத்தம் ஒரு மணி நேரம் வரை வருவார் என்று கூறப்படுகிறது. மும்பையில் அவர் ஒரு தாதாவாக இருப்பார் என்றும் ஒரு பிரச்னையிலிருந்து விஷ்ணு விஷாலையும், விக்ராந்த்தையும் காப்பாற்றுவது போல் அவர் கதையில் பயணப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ரஜினிகாந்த் 40 கோடி சம்பளம் வாங்கியதாக கூறுப்படுகிறது.


Click it and Unblock the Notifications











