»   »  பிரபு தேவா Vs

பிரபு தேவா Vs

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் நான் ஒரு சைபர், பிரபு தேவா ஒரு சைபர். அப்படிப்பட்டநிலையில் இருக்கும் பிரபுதேவா எனது இயக்கத்தில் உருவான லட்சியம் படத்தைதமிழில் வெளி வர விடாமல் தடுக்க முயல்வது கண்டனத்துக்குரியது என்று நடிகர்,நடன இயக்குனர், இயக்குனர் லாரன்ஸ் ராகவேந்திரா காட்டமாக கூறியுள்ளார்.

டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவில் கலக்க ஆரம்பித்தவர் லாரன்ஸ். அமர்க்களம்படத்தில் இடம் பெற்ற காலம் கலி காலம் ஆகிப் போச்சுடா பாடலுக்கு லாரன்ஸ்நடனம் வடிவமைத்திருந்த விதமும், அவர் ஆடிய ஆட்டமும் ரசிகர்களை வெகுவாகக்கவர்ந்தது.

அதைத் தொடர்ந்து கிடுகிடுவென உயரத்திற்குப் போனார் லாரன்ஸ். பார்த்தாலேபரவசம் படத்தின் மூலம் இவரை ஹீரோவாக்கினார் இயக்குனர் பாலச்சந்தர்.இன்னொரு ரஜினியாக வருவாய் என்றும் லாரன்ஸை வெகுவாகப் பாராட்டினார்.

ஆனால் இப்படத்திற்குப் பிறகு லாரன்ஸுக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்புவரவில்லை. இதனால், டான்ஸ் மாஸ்டராக தொடர்ந்து நீடித்து வந்தார். ஆனால்தெலுங்கு இவரை இயக்குனராக அங்கீகரித்தது. நாகார்ஜுனாவை ஹீரோவாகப்போட்டு இவர் இயக்கிய மாஸ் படம் அங்கு பெரும் வெற்றியைப் பெற்றது.

இதனால் தெம்பான லாரன்ஸ் ஸ்டைல் என்று அடுத்து ஒரு படத்தை இயக்கினார்.இதில் பிரபு தேவாவும் இணைந்து நடித்திருந்தார். இப்படமும் அங்கு ஹிட் ஆனது.இதனால் மகிழ்ந்து போன லாரன்ஸ் இப்படத்தை தமிழில் டப் செய்தார். படத்திற்குஒரு தாயின் லட்சியம் என்றும் பெயர் வைத்தார்.

ஆனால் இப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிட பிரபு தேவா எதிர்ப்புதெரிவித்தார். தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரும் கொடுத்தார். இதனால் கடுப்பாகிப்போன லாரன்ஸ் பிரபுதேவாவை விமர்சித்துள்ளார்.

இந்த சர்ச்சை குறித்து லாரன்ஸ் கூறுகையில்,

ஸ்டைல் படத்தின் கதை என்னோட நிஜக் கதை. எனது தாயார் என்னை எப்படிடான்ஸர் ஆக்கிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ, கனவு கண்டாரோஅதையேதான் ஸ்டைலில் சொல்லியுள்ளேன்.

இந்தப் படத்தில் என்னை வளர்த்து ஆளாக்கும் குரு வேடத்தில் பிரபு தேவாவைநடிக்க வைத்தேன். அவர் காலில் நான் விழுவது போல கூட சீன் வைத்தேன்.

ஸ்டைல் தெலுங்கில் பெற்ற வெற்றி எனக்கு சந்தோஷம் கொடுத்தது. நமது தமிழ்மக்களும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என விரும்பினேன். அதனால்தான்தமிழில் இப்படத்தை டப் செய்யும் முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால் படம் வரக்கூடாது என தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் செய்து விட்டார் பிரபு தேவா.

எனக்கு பெரிய ஷாக். என்னாச்சு என்று போன் செய்து கேட்டால், எனக்குப்பிடிக்கலை, வேண்டாம் என்று ஒரே வ>யில் சொல்லி விட்டார்.

அது மட்டமான ரசனை கொண்ட படமாக இருந்தால் தமிழ் நாட்டு மக்களுக்கு அதைக்காட்ட பயப்படுவதில் அர்த்தம் உள்ளது. ஆனால் இந்தப் படம் வந்தால் தனது இமேஜ்பாதிக்கப்படும் என்று பிரபு தேவா பயப்படுவதாக நினைக்கிறேன்.

நான் கேட்கிறேன், அப்படி அவருக்கு தமிழில் என்ன தான் இமேஜ் இப்போதுஇருக்கிறது? இங்கே அவர் ஒன்றும் சூப்பர் ஸ்டார் கிடையாது. நானும் சைபர்தான்,அவரும் சைபர்தான்.

இப்போது தயாரிப்பாளரே போய் பேசி ஒரு வழியாக லட்சியம் படத்தை தமிழில்ரிலீஸ் செய்யப் போகிறார்.

ஒன்று மட்டும் நிச்சயம், இனிமே பிரபு தேவாவுடன் இணைந்து மட்டும் நடிக்கவேமாட்டேன் என்று பெ>ய கும்பிடாகப் போட்டார் லாரன்ஸ்.

சரி, நீங்கள் இயக்கும் முனி படம் எப்படி? என்று டிராக்கை மாற்றினால்உற்சாகமாகிறார் லாரன்ஸ்.

இயக்குனர் சரண் சார் தயாரிப்புதான் இது. இந்தப் படத்தை படு வித்தியாசமாகஇயக்கியுள்ளேன். ராஜ்கிரணுக்கு இதில் மிக வித்தியாசமான வேடம், எனக்கும் தான்.

முனி மூலமாக தமிழிலும் சாதிப்பேன் என்கிறார்.

அடிச்சு தூள் பண்ணு தலைவா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil