»   »  லாரன்ஸ் கட்டிய கோவில்!

லாரன்ஸ் கட்டிய கோவில்!

Subscribe to Oneindia Tamil

டான்ஸ் மாஸ்டர், நடிகர் மற்றும் இயக்குநரான லாரன்ஸ் ராகவேந்திரா தனது இஷ்டதெய்வமான ராகவேந்திராவுக்கு கோவில் ஒன்றைக் கட்டியுள்ளார். விரைவில் சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து கோவிலைத் திறக்கவுள்ளாராம்.

பிரபு தேவா அலை படு வேகமாக அடித்துக் கொண்டிருந்த வேளையில், டான்ஸ்இயக்குநராக கலக்க ஆரம்பித்தவர் லாரன்ஸ். அமர்க்களம் படத்தில் அவர் ஆடியஆட்டம், அவருக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. கிடுகிடுவென உயரத்தொடங்கிய அவர் பிறகு நடிகராகவும் அவதாரம் எடுத்தார்.

அவரை ஹீரோவாக வைத்து கே.பாலச்சந்தர் ஒரு படத்தை இயக்கினார். அந்தப்படத்தில் லாரன்ஸின் நடிப்புத் திறமை பளிச்சிட்டது என்றாலும் தொடர்ந்து ஹீரோவாய்ப்பு வரவில்லை.

இதையடுத்து இயக்குநராக உருவெடுத்த லாரன்ஸ் தெலுங்கில் மாஸ், ஸ்டைல் எனஇரு படங்களை இயக்கி வெற்றி பெற்றார். இதையடுத்து தற்போது தமிழில் முனிஎன்ற படத்தை இயக்கி வருகிறார் லாரன்ஸ்.

அத்தோடு தனது தாயார் பெய>ல் கண்மணி காப்பகம் என்ற காப்பகத்தையும் நடத்திவருகிறார். இந்த காப்பகத்தில் ஊனமுற்றோருக்கு அவர் அடைக்கலம்கொடுத்துள்ளார். அவர்களில் நடனத் திறமை உள்ளவர்களைக் கண்டறிந்து நடனமும்சொல்லிக் கொடுத்து அசத்துகிறார் லாரன்ஸ்.

படு பிசியாக இருக்கும் நிலையிலும் சூப்பராக ஒரு வேலையைச் செய்துள்ளார்லாரன்ஸ். அதாவது தனது இஷ்ட தெய்வமான ராகேவந்திரருக்கு கோவில்கட்டியுள்ளார். சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் இந்தக் கோவிலைநிர்மாணித்துள்ளார் லாரன்ஸ்.

கோவில் கட்ட இதுவரை ரூ. 12 லட்சத்தை செலவிட்டுள்ளாராம். கோவில் கட்டும்பணி முடிவடைந்து விட்டதாம். அடுத்த மாதம் கும்பாபிஷேகத்தை நடத்தஇருக்கிறாராம் லாரன்ஸ். இதற்கு ரஜினிகாந்த்தையும் அழைக்கவுள்ளார். ரஜினியும்கூட ராகவேந்திரர் பக்தர்தான் என்பது நினைவிருக்கலாம்.

முனியை இயக்கிக் கொண்டே தெலுங்கில் நாகார்ஜூனாவை வைத்து டான் என்றபடத்தையும் இயக்கி வருகிறார் லாரன்ஸ்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil