விஜயகாந்த் மகனை ஏமாற்றிவிட்டாரா லாரன்ஸ்?.. கோலிவுட்டில் கிளம்பிய புது பஞ்சாயத்து

சென்னை: தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் லாரன்ஸ். பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த அவர் கடைசியாக ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் லாரன்ஸின் நடிப்பும் அட்டகாசமாகவே இருந்தது. இதற்கிடையே லாரன்ஸ் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறார். அது பலரிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி பஞ்சாயத்தை கிளப்பியிருக்கிறது.

டான்ஸராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர் லாரன்ஸ். சூப்பர் சுப்பராயனிடம் பணியாற்றிக்கொண்டிருந்த லாரன்ஸின் நடன திறமையை பார்த்து ரஜினிகாந்த் அவரை நடன பள்ளியில் சேர்த்துவிட்டார். அதனையடுத்து பல பாடல்களில் க்ரூப் டான்ஸராக நடனத்தில் பின்னியெடுத்தார் லாரன்ஸ். சிரஞ்சீவி நடித்த ஹிட்லர் படத்தின் மூலம் நடன அமைப்பாளராகும் வாய்ப்பு லாரன்ஸுக்கு கிடைக்க அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார் அவர்.

Raghava Lawrence Shanmuga Pandiyan Vijayakanth

நடிகர், இயக்குநர்: இதனையடுத்து பல படங்களில் நடன அமைப்பாளராக மாஸ் காட்டினார். அதுமட்டுமின்றி அமர்க்களம், திருமலை உள்ளிட்ட படங்களின் பாடல்களில் தோன்றி நடனம் ஆடிய லாரன்ஸ் அற்புதம் படம் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். தொடர்ந்து 2004ஆம் ஆண்டு மாஸ் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தமிழில் முனி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனையடுத்து காஞ்சனா சீரிஸை இயக்கிய அவருக்கு காஞ்சனாவும், காஞ்சனா 2வும் மெகா ஹிட்டை கொடுத்தது. கடைசியாக அவரது நடிப்பில் ஜிகர்தண்டா 2 வெளியானது. அடுத்ததாக பென்ஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன.

உதவி: லாரன்ஸ் நடிப்போடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறார். பல சிறுவர்களின் படிப்புக்கு ஃபீஸ் கட்டுவது, பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்துவருவது என பலரது பாராட்டை பெற்றிருக்கிறார். சிறுவயது முதல் தான் படிக்க வைத்து இப்போது டிகிரி முடித்திருக்கும் இளைஞரை அறிமுகப்படுத்தி சில மாதங்களுக்கு முன்புகூட வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மாற்றம் என்ற அமைப்பையும் அவர் உருவாக்கியிருக்கிறார்.

கொடுத்த வாக்கு: இதற்கிடையே விஜயகாந்த் கடந்த வருடம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலருக்கு சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் அவரின் மகன் சண்முக பாண்டியனின் திரை வாழ்க்கை வளர்ச்சிக்கு விஜய் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. சூழல் இப்படி இருக்க லாரன்ஸோ யாரும் எதிர்பார்க்காத வகையில், சண்முக பாண்டியனின் படைத்தலைவன் படத்தில் தானும் நடிப்பேன் என்று லாரன்ஸ் கூறியிருந்தார்.

வெளியான தகவல்: ஆனால் இப்போது அந்த விவகாரம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் இதுவரை படைத்தலைவன் படத்தில் நடிக்கவில்லை என்றும்; அதேசமயம் தனது தம்பியான எல்வின் நடிக்கும் படத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்களோ இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை; ஆனால் இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் லாரன்ஸ் கொடுத்த வாக்கின் வலிமை அவ்வளவுதானா என்று தோன்றுவதாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X