»   »  ஜி.வி. பிரகாஷுடன் நடிக்க சொன்னா இந்த நடிகைகள் ஏன் இப்படி தெறித்தோடுகிறார்கள்?

ஜி.வி. பிரகாஷுடன் நடிக்க சொன்னா இந்த நடிகைகள் ஏன் இப்படி தெறித்தோடுகிறார்கள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கேட்டாலே முன்னணி ஹீரோயின்கள் பேயைக் கண்டது போன்று தெறித்து ஓடுகிறார்களாம்.

Select City
Buy Bruce Lee 2 - The Fighter (U/A) Tickets

அவர் பாட்டுக்கு இசையமைத்துக் கொண்டும், பாட்டு பாடிக் கொண்டும் இருந்தார் ஜி.வி. பிரகாஷ். இந்நிலையில் தான் ஒரு சுபயோக சுபதினத்தில் அவருக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசை வந்தது. அவர், ஸ்ரீதிவ்யாவுடன் சேர்ந்து பென்சில் படத்தில் நடித்தார். ஆனால் படம் இன்னும் வெளிவரவில்லை.


Leading actresses say NO to GV Prakash

அதன் பிறகு அவர் நடித்த டார்லிங் படம் ரிலீஸானது. டார்லிங்கை அடுத்து ஜி.வி. நடித்த த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம் அண்மையில் ரிலீஸாகி நல்ல வசூலையும் பார்த்துள்ளது. த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க முடியாத அளவுக்கு அதில் கசமுசாக்கள் இருந்தது.


இந்நிலையில் அவர் ப்ரூஸ் லீ படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். அந்த படத்தில் தனக்கு ஜோடியாக முன்னணி நடிகையை நடிக்க வைக்க வேண்டும் என்று ஜி.வி. கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து அவர் ஆசையை ஏன் கெடுப்பானேன் என காஜல் அகர்வால், ஹன்சிகா, நயன்தாரா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோரிடம் பேசியுள்ளார்.


அம்மணிகள் அனைவரும் சொல்லி வைத்தது போன்று தயங்கவே எவ்வளவு பணம் கேட்டாலும் தருகிறோம் என்று கூறியுள்ளனர். அப்படி இருந்தும் அவர்கள் எங்களை விட்டுவிடுங்கள் ப்ளீஸ் என்று கூறிவிட்டார்களாம்.


இப்படி அவர்கள் எல்லாம் கைவிரித்த பிறகே டோலிவுட்டில் இருந்து கீர்த்தி கர்பந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.

English summary
Buzz is that leading actresses of Kollywood have refused to act with music composer cum actor GV Prakash.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil