ஜெயிலர், லியோ அளவுக்கு லீடர் படம் இருக்கும்.. லெஜண்ட் சரவணா சரவெடி.. இந்த வாரம் வசூல் சாதனை படைக்குமா?
சென்னை: வரும் ஏப்ரல் 3ம் தேதி தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட நல்ல நல்ல படங்கள் அணிவகுத்து திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றன. கருடன் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு வெற்றிப் படத்தைக் கொடுக்க இயக்குநர் துரை செந்தில்குமார் காத்திருக்கிறார்.
லெஜண்ட் படம் ட்ரோல்களை சந்தித்த நிலையில், எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணா நடித்துள்ள லீடர் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் காட்சிகள் எல்லாம் கண்டிப்பாக இந்த முறை மிஸ் ஆகாது என்கிற அனுபவத்தையே தருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் ஆடியோ லான்ச்சில் பேசிய லெஜண்ட் சரவணன் இந்த படம் ஜெயிலர், லியோ அளவுக்கு பக்கா ஆக்ஷன் படமாக இருக்கும் என பேசியுள்ள காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
ஏப்ரல் 3 வெளியாகும் படங்கள்: இந்த வாரம் ஏப்ரல் 3ம் தேதி லெஜண்ட் சரவணா நடித்துள்ள லீடர் திரைப்படம் திரைக்கு வருகிறது. மேலும், காளிதாஸ் 2, நீளிரா, கார்மேனி செல்வம், பைக்கர் உள்ளிட்ட பல படங்கள் திரைக்கு வருகின்றன. இந்த வாரம் கோலிவுட்டில் கடுமையான போட்டி நிலவினாலும், லெஜண்ட் சரவணாவின் லீடர் படம் பந்தயம் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லீலா பேலஸில் லீடர் ஆடியோ லான்ச்: கடந்த ஞாயிற்றுக்கிழமை நட்சத்திர ஹோட்டலான லீலா பேலஸில் லீடர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பாக்கியராஜ், கலைப்புலி எஸ். தாணு, லெஜண்ட் சரவணா, பாயல் ராஜ்புத், ஷாம், சந்தோஷ் பிரதாப், துரை செந்தில்குமார், அறந்தாங்கி நிஷா, ஐஸ்வர்யா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். லெஜண்ட் சரவணா தான் லீடர் என்கிற டைட்டிலுக்கு பக்காவான ஆள் என்று பல பிரபலங்கள் பாராட்டினர்.
ஜெயிலர், விக்ரம், லியோ மாதிரி இருக்கும்: தமிழ் சினிமாவில் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த ரஜினிகாந்தின் ஜெயிலர், கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் விஜய்யின் லியோ படங்களை போலவே இந்த லீடர் பரபரப்புக்கும் ஆக்ஷன் காட்சிகளுக்கும் பஞ்சமே இல்லாமல் பட்டாசாக இருக்கும் என லெஜண்ட் சரவணா அந்த இசை வெளியீட்டு விழாவில் சரவெடியாக பேசினார். ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்த வாரம் பாக்ஸ் ஆபீஸில் லீடர் திரைப்படம் மற்ற படங்களின் வசூலை விட அதிக வசூல் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











