அப்பா பாக்கத்தான் டெரர்.. மீசை ராஜேந்திரன் மகளுக்கு வாழ்த்து சொன்ன லெஜண்ட்!

சென்னை: நடிகர் மீசை ராஜேந்திரனின் மகள் சௌபாக்கியவதி நமீதாவுக்கு கடந்த பிப்ரவரி 20 ஆம் திருமணம் நடைபெற்றது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டு மனமக்களை வாழ்த்திய நிலையில், லெஜண்ட் சரவணன் மணமக்களை நேரில் அழைத்து வாழ்த்தி உள்ளார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் மீசை ராஜேந்திரனின் மகளுக்கு கடந்த 20ந் தேதி தடபுடலாக திருமணம் நடைபெற்றது. இதில், தமிழக முதவர் மு.க.ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த், சீமான், ஜெயகுமார், தமிழிசை சௌந்தர ராஜன், செல்வபெருந்தகை என பல அரசியல் கட்சித் தலைவர்களும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதா ரவி, நாசர், தியாகு, பிரபு, டி ராஜேந்தர், ஸ்ரீகாந்த், கிங்காங் என சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Meesai Rajendra Legend Saravanan leader

வாழ்த்திய லெஜண்ட் சரவணன்: கடந்த ஒருவாரமாக மீசை ராஜேந்திரனின் மகள் திருமணத்தை பற்றிய பேச்சாக இருக்கும் நிலையில், லெஜண்ட் சரவணன் தனது அலுவலகத்திற்கு மீசை ராஜேந்திரனின் குடும்பத்தை நேரில் அழைத்து வாழ்த்து கூறினார். மேலும், மகளுக்கு அறிவுரை கூறிய லெஜண்ட், அப்பா பாக்கத்தான் டெரர், கல்யாணம் ஆனதும் கதறி அழுதுவிட்டார். உங்க மேல அதிக அன்பு வைத்து இருக்கிறார். இப்படி ஒரு அப்பா கிடைப்பதற்கு நீங்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும், எவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் வந்து வாழ்த்தி இருக்கிறார்கள் என்றார். இதையடுத்து, மீசை ராஜேந்திரனின் மகள் மற்றும் மருமகன் இருவரும் லெஜண்ட் சரவணனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்.

லீடர்: தமிழகத்தின் முன்னணி தொழிலதிபரான லெஜண்ட் சரவணன், கடந்த 2022ம் ஆண்டு தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லெஜண்ட் சரவணன், தனது 2வது படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு 'லீடர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் மாதம் தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஆண்ட்ரியா, விடிவி கணேஷ், ஷாம், லால் எனப் பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X