Leo: “அது நடக்காம 1000 கோடி வசூல் கஷ்டம்..? விஜய்யின் லியோவுக்கு காத்திருக்கும் சவால்கள்

சென்னை: விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ, அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தின் செகண்ட் சிங்கிளான 'BaDass' பாடல் நேற்று மாலை வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

முன்னதாக லியோ இசை வெளியீட்டு விழா கேன்சல் செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி வசூலிக்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 Leo: Ramesh Bala explains that Vijays Leo is unlikely to collect 1000 crores

லியோவுக்கு காத்திருக்கும் சவால்கள்: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள லியோவை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். விஜய் - லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளதால், ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

கோலிவுட்டிலிருந்து லியோ தான் முதல் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அதற்கு பெரிதாக வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது லியோ படத்தின் முதல் ப்ரொமோஷனாக ஆடியோ லான்ச் நடைபெறவிருந்தது. இந்த வாரம் 30ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ ஆடியோ லான்ச் நடைபெறும் என சொல்லப்படது.

ஆனால், கடைசி நேரத்தில் லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக படக்குழு அறிவித்தது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். லியோ ஆடியோ லான்ச் கேன்சலாக அரசியல் ரீதியான அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், அதிகளவில் ரசிகர்கள் கூடினால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குழப்பம் ஏற்படும் என்றே, இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக சினிமா ட்ராக்கர் ரமேஷ் பாலா தெரிவித்துள்ளார்.

 Leo: Ramesh Bala explains that Vijays Leo is unlikely to collect 1000 crores

படக்குழு சார்பில் லியோ ஆடியோ லான்ச் பாஸ் வழங்கும் முன்பே, போலி டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும், படம் ரிலீஸாகும் முன்பே லியோ ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட் நடத்த வேண்டும். அப்படி ப்ரொமோஷன் செய்தால் மட்டுமே லியோ ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையும் என தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்தியிலும் லியோ வெளியாவதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், அதுவும் பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு தடையாக இருக்கும் என ரமேஷ் பாலா கூறியுள்ளார். இருப்பினும் லியோ படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைக்கும் என்றும், விஜய் ப்ளஸ் லோகேஷ் கூட்டணி இந்த முறையும் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் எனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X