ஹீரோ .. ஹீரோ ..

By Staff

லேசா லேசா படம் வெளியாகிவிட்டது. ஆனால், படத்தில் நடித்த ஷாமை போஸ்டர்களில் பார்க்கவேமுடியவில்லை. எல்லாம் கோலிவுட் சென்டிமெண்ட் தான் காரணமாம்.

முதலில் ஷாம், த்ரிஷா ஆகியோரின் பெரிய படங்களுடன் தான் போஸ்டர்கள் வெளியாயின. ஆனால், இந்தப்படம் வெளியான தியேட்டர்கள் எல்லாமே காலியாகவே கிடக்கின்றன. படத்தின் கதையும் மோசம், படம்எடுக்கப்பட்ட விதமும் மோசம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

ஆனால், ராசியில்லாத ஷாமை போஸ்டரில் போட்டதால் தான் படம் ஓடவில்லை என்ற தயாரிப்பாளர் விக்ரம்சிங்கின் காதில் சில ஓதிவிட உடனே வேறு போஸ்டர்கள் அடிக்க உத்தரவிட்டுவிட்டார்.

படத்தில் துக்கடா ரோலில் நடித்த மாதவன் படத்தையும் திரிஷாவையும் பெரிய அளவில் புரோஜெக்ட் செய்யச்சொல்லிவிட்டார். இந்த புதிய போஸ்டர்களில் ஒரு ஓரத்தில் ஸ்டாம்ப் சைசில் ஷாம் படம் உள்ளது.

இதனால் ஷாம் படு எரிச்சலில் உள்ளாராம். ஷாம் நடித்த முதல் படமான 12பியில் ஆரம்பித்து இதுவரைஅவருக்கு ஒரு படம் கூட ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவரது சம்பளம் ரூ. 50 லட்சமாம்.

லேசா லேசா மூலம் அவருக்கு ராசியில்லாதவர் என்ற முத்திரையையும் தயாரிப்பாளர் தரப்பில் பரப்பிவிட்டுவிட்டார்கள்.

உண்மையைச் சொன்னால் படம் ஓடாததற்கு மலையாளத்தைச் சேர்ந்த இயக்குனர் பிரியதர்ஷனைத் தான் குறைசொல்ல வேண்டும் என்கின்றனர் கோலிவுட் ஆசாமிகள். படத்தில் கதையே இல்லாமல் போஸ்டரில் மாதவன்-திரிஷாவைப் போட்டுவிட்டால் மட்டும் படம் ஓடிவிடுமா என்று கேட்கின்றனர்.

இப்போ தானே புது போஸ்டர் ஒட்டியிருக்காங்க.. அடுத்த வாரம் தான் ரிச்ல்ட் தெரியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X