Year Ender 2023 - 2023ல் சோஷியல் மீடியாவில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருந்த டாப் 5 நடிகர்கள் தெரியுமா..?

சென்னை: 2023ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருந்த டாப் 5 நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.

உலகம் இப்போது சமூக வலைதளங்களால் இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற நிலைமைதான் இருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதள பக்கங்களில் பலரும் தங்களது அன்றாட நிகழ்வுகளை பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். செலிபிரிட்டிகளும் தங்களது சோஷியல் மீடியாவில் பல பதிவுகளை போட்டுவருகின்றனர். மேலும் ரசிகர்களுடன் எளிதாக கனெக்ட் ஆகும் விதமாகவும் அது இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் 2023ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருந்த டாப் 5 தமிழ் நடிகர்களை பார்க்கலாம்.

Lets check out the top 5 most followed actors on Instagram in 2023

சிம்பு: இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் சிம்பு. சில காரணங்களால் சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்த அவர் ஈஸ்வரன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அவர் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. தற்போது அவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடித்துவருகிறார். இவருக்கு 12.4 மில்லியன் ஃபாலோயர்ஸ் 2023ஆம் ஆண்டு கணக்குப்படி இருக்கின்றனர்.

விஜய்: சிம்புவுக்கு அடுத்ததாக தளபதி விஜய் இருக்கிறார். விஜய்யை பொறுத்தவரை எப்போதும் சைலெண்ட்டாக இருப்பவர். அவர் சோஷியல் மீடியா கணக்கை லியோ திரைப்படத்தின்போதுதான் தொடங்கினார். அது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அவர் அக்கவுண்ட் ஓபன் செய்ததும் அவருக்கு 10 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் சரசரவென்று வந்தனர்.விஜய் இப்போது தனது 68ஆவது படத்தில் நடித்துவருகிறார்.

சூர்யா: தமிழின் டாப் நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரது நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் வெளியாகி ஃப்ளாப் ஆனது.அதனையடுத்து தற்போது அவர் கங்குவா படத்தில் நடித்துவருகிறார். சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சூர்யாவுக்கு இதுவரை மொத்தம் 8.2 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி: நான்காவது இடத்தில் இருக்கிறார் விஜய் சேதுபதி. தமிழில் மட்டும் நடித்து வந்த அவர் ஃபர்ஸி, ஜவான், மெர்ரி கிறிஸ்துமஸ் என ஹிந்தியிலும் இப்போது படுபிஸி. இதனால் இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகராக மாறிவிட்டார் அவர். அவரை சோஷியல் மீடியாவில் மொத்தம் 7.9 மில்லியன் பேர் ஃபாலொ செய்கிறார்கள்.

தனுஷ், சிவகார்த்திகேயன்: இந்த லிஸ்ட்டில் கடைசி இடத்தை பகிர்ந்துகொள்பவர்கள் தனுஷும் சிவகார்த்திகேயனும். தனுஷ் முன்னணி நடிகராக இருக்கிறார். அவர் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக தனது 50ஆவது படத்தை இயக்குகிறார். அவருக்கு 6.7 மில்லியன் ஃபாலோயர்ஸும், சிவகார்த்திகேயனுக்கு 6.7 மில்லியன் ஃபாலோயர்ஸும் இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X