ஜனநாயகன் மட்டுமல்ல கேவிஎன் நிறுவனத்துக்கு டாக்ஸிக் படமும் தலைவலியா மாறப்போகுதா?.. அடக்கொடுமையே!

சென்னை: கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் ஆழம் தெரியாமல் காலை விட்டது போல விட்டு மாட்டிக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். ஜனநாயகன் படத்தின் சென்சார் பிரச்னையை தணிக்கை வாரியத்துடன் சுமூகமான பேச்சு வார்த்தை மூலமே தீர்த்துக் கொண்டிருந்தால், இந்நேரம் படம் வெளியாகி இருக்கும் என்கின்றனர்.

அதற்கு பதில், நீதிமன்றத்தை நாடி சென்றது தான் இதுவரை படம் வெளியாக முடியாமல் தவித்துக் கொண்டிருக்க காரணம் என்கின்றனர். இந்நிலையில், இந்த பிரச்னை ஜனநாயகன் படத்தோடு நிற்காது என்றும் கேவிஎன் தயாரிப்பில் அடுத்து ரிலீஸுக்கு ரெடியாகி வரும் டாக்ஸிக் படத்துக்கும் சிக்கல் ஏற்படும் என பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.

Like Jana Nayagan KVN also face big trouble with Yash s Toxic release

ஜனநாயகன் படத்திலேயே 500 கோடி லாபம் போச்சுன்னு புலம்ப ஆரம்பித்துள்ள கேவிஎன் நிறுவனம் டாக்ஸிக் படத்தால் வரக்கூடிய 1000 கோடி வருமானத்துக்கும் பெரிய ஆப்பு வரப்போகிறது என சினிமா வட்டாரத்தில் சில பிரபலங்கள் இப்போதே எச்சரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளனர்.

துரந்தர் 2 vs டாக்ஸிக்

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், அக்‌ஷய் கன்னா, சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், மாதவன் மற்றும் சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் இந்தியாவிலேயே 1000 கோடி வசூலை ஈட்டி அபார சாதனை செய்த நிலையில், அதன் 2வது பாகம் பிரம்மாண்டமாக தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் வரும் மார்ச் 19ம் தேதி வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், அதே நாளில் யஷ் நடித்துள்ள டாக்ஸிக் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் கிளாஷ் ஏற்படும் என பலரும் கருதுகின்றனர். ஆனால், இந்த போட்டி தான் டாக்ஸிக் படத்துக்கும் சிக்கல் ஏற்படுத்தும் என தகவல்கள் கசிந்துள்ளன.

Like Jana Nayagan KVN also face big trouble with Yash s Toxic release

துரந்தர் 2வுக்கு சாதகமாக

துரந்தர் படத்துக்கே பெரிதாக சென்சார் பிரச்னை இல்லாமல் ஏ சான்றிதழ் கொடுத்து படத்தை ரிலீஸ் செய்து விட்டனர். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான படமாகவும் பாஜகவுக்கு ஆதரவான படமாகவும் துரந்தர் உள்ளதாக பலரும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இந்நிலையில், துரந்தர் 2 படத்துக்கும் பாஜக சப்போர்ட் அதிகமாக இருக்கும் என்கின்றனர். இந்நிலையில், டாக்ஸிக் படத்துக்கு கண்டிப்பாக வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என திடுக்கிட வைக்கின்றனர்.

ஜனநாயகன் படத்துக்கு மட்டுமல்ல

ஏற்கனவே பராசக்தி படத்துக்கு சான்றிதழ் கிடைத்து ஜனநாயகன் படத்துக்கு சான்றிதழ் கிடைக்க காரணமே அந்த படத்தில் காங்கிரஸ் கட்சியை டேமேஜ் செய்திருந்தது தான் காரணம் என்கின்றனர். தொடர்ந்து ஜனநாயகன் படத்தின் மூலம் தணிக்கை வாரியத்தையே கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் பகைத்துக் கொண்ட நிலையில், டாக்ஸிக் படமும் துரந்தர் 2வுக்குப் போட்டியாக வெளியானால் கண்டிப்பாக அந்த படத்துக்கும் சரியான நேரத்தில் சென்சார் கிடைக்குமா? என்பது சிக்கல் தான் என்கின்றனர். எவ்வளவு விரைவாக சென்சாருக்கு கேவிஎன் நிறுவனம் அப்ளை செய்கின்றனரோ அந்தளவுக்கு படத்தின் ரிலீஸ் தேதியில் எந்தவொரு பாதிப்பும் வராது என்றும் கூறுகின்றனர். ஜனநாயகன் படத்தை போலவே டாக்ஸிக் படத்துக்கும் சென்சார் பிரச்னை வந்தால் கேவிஎன் நிறுவனத்துக்கு பெரிய இடி விழும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X