ஜெயம் ரவியிடம் கைவசம் உள்ள படங்கள்.. வரிசையாக ரிலீஸ் .. அதிரடியாக உயர்ந்த சம்பளம்!
சென்னை : நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் வரிசையாக திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இதனால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திரைப்படப் படத்தொகுப்பாளரும் தயாரிப்பாளருமான மோகனின் இளைய மகனாக ஜெயம் ரவி குழந்தை நட்சத்திரமாக தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார்.
ஜெயம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஜெயம் ரவி. முதல் படத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் என அனைத்துப்படங்களும் வெற்றி பெற்றன.

ஜெயம் ரவி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, இளம் பெண்களின் கனவு நாயகனான இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பூமி. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்தார். விவசாயத்தை மையமாக கொண்ட இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அகிலன்
ஜெயம் ரவியின் நடிப்பில் அகிலன் , பொன்னியின் செல்வன், இறைவன், ஜனகனமன திரைப்படம் வெளியாக உள்ளன. அதில் அகிலன் திரைப்படம் செப்டம்பர் 15ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. முழு நீள ஆக்சன் திரைப்படமான இப்படத்தை பூலோகம் படத்தை இயக்கிய என். கல்யாண் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இதனை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

மாஸான கதாபாத்திரம்
அகிலன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி, தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளனர். கைதி படத்தில் இசையால் கவனம் ஈர்த்த சாம் சி.எஸ். அகிலன் படத்திற்கு இசையமைத்துள்ளார். அகிலன் படத்தில் கப்பலில் பணிபுரியும் நபராக ஜெயம் ரவி நடித்துள்ளார்.

அருள் மொழி வர்மன்
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி அருள் மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இரண்டு பாகமாக வெளியாக உள்ள இப்படத்தின் அனைத்து கட்டப்பணிகளும் முடிந்து பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளது.
Recommended Video

ஜெயம் ரவி - நயன்தாரா கூட்டணி
இயக்குநர் அகமது மற்றொரு படத்தை ஜெயம் ரவியை வைத்து இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு போலீஸ் கதாபாத்திரம். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். 'தனி ஒருவன்' படத்திற்குப் பிறகு, ஜெயம் ரவி - நயன்தாரா இப்படத்தில் இணைகிறார்கள். இப்படத்திற்கு இறைவன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் அக்டோபர் மாதம் 21ந்தேதி வெளியாக உள்ளது.

ஹரியின்படத்தில்
இதையடுத்து, ஜெயம் ரவி மற்றும் நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகி வந்த ஜன கண மன திரைப்படம் நீண்ட காலமாக பெண்டிங்கில் உள்ளது. பெரும்பகுதி படம் படப்பிடிப்பு நடத்தப்பட்டு விட்டதாகவும் வெளிநாட்டு போர்ஷன்கள் மட்டுமே பாக்கி உள்ளதா கூறப்படுகிறது. இந்த படத்தை அடுத்து இயக்குநர் ஹரி தனது அடுத்தப் படத்திற்கான கதையை ஜெயம் ரவியிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், 'பொன்னியின் செல்வன்' 'அகிலன்' இறைவன், ஜன கன மன படங்களைத் தொடர்ந்து ஹரியுடன் ஜெயம் ரவி கைகோக்க இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











