ச்சோ ஸ்வீட், க்யூட்: வைரலாகும் தனுஷின் முத்த புகைப்படம்
Recommended Video

சென்னை: தனுஷுக்கு ஒரு குட்டிப்பாப்பா முத்தம் கொடுக்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாரி 2 படம் கடந்த வாரம் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடிக்க உள்ளார்.
அசுரன் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.

அசுரன்
அசுரன் படத்திற்காக கறை படிந்த பற்களுடன் தனுஷ் அப்பாவி போன்று சிரிக்கும் போஸ்டர் வெளியானது. இப்படி கெட்டப் மாற்றி நடிப்பது எல்லாம் தனுஷுக்கு பெரிய விஷயமே இல்லை. அசுரன் போஸ்டரை பார்த்ததும் தனுஷ் வித்தியாசமாக நடிக்கப் போகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. படத்தை உடனே பார்க்கும் ஆவலும் வந்துள்ளது.
முத்தம்
அசுரன் கெட்டப்பில் இருக்கும் தனுஷ் ஒரு குட்டிப் பாப்பாவை தூக்கி வைத்திருக்கிறார். அந்த குட்டி தனுஷின் கன்னத்தில் முத்தமிடும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. சோ க்யூட்.

ஜி.வி. பிரகாஷ் குமார்
அசுரன் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமாருக்கும், தனுஷுக்கும் இடையே இருந்த பிரச்சனை எல்லாம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.

அனிருத்
ஜி.வி. பிரகாஷுடனான பிரச்சனையை மறந்து அவருடன் சேர்ந்து வேலை செய்வது போன்று அனிருத்தையும் உங்களின் படத்திற்கு இசையமைக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள். ரசிகர்களின் ஆசையை தனுஷ் நிச்சயம் நிறைவேற்றி வைப்பார் என்று நம்புவோமாக.


Click it and Unblock the Notifications











