»   »  தரை டிக்கெட் ரேஞ்சுக்கு இறங்கி ஆடும் விஜய்!

தரை டிக்கெட் ரேஞ்சுக்கு இறங்கி ஆடும் விஜய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் அட்லீயின் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தில் தரை டிக்கெட் அளவிற்கு இறங்கி ஆடும் பாடல் ஒன்று உள்ளதாக இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தை முடித்த கையோடு அடுத்து தனது 59வது படத்தை ராஜா ராணி படத்தை இயக்கிய அட்லீயின் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார்.

முதலில் நயன்தாரா நடிப்பதாக இருந்த இப்படத்தில் தற்போது சமந்தா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாசின் 50 வது படம் என்பதால் இசையில், பாடலில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.

நடனம் புதிதல்ல

நடிகர் விஜயின் எல்லா படங்களிலும் கதை இருக்கிறதோ இல்லையோ கட்டாயம் பாடல்களும் நடனமும் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைக்கப் பட்டிருக்கும்

செம லோக்கல் பாட்டு

அந்த வகையில் தற்போது அட்லீயின் இயக்கத்தில் நடிக்கப் போகும் படத்தில் செம லோக்கல் ஆக ஒரு பாடலுக்கு தரை டிக்கெட் அளவிற்கு இறங்கி ஆடி இருக்கிறார்.

கதை தெரியைலயே

கதை தெரியைலயே

இந்தப் புதிய படத்தின் கதை என்ன என்பது தெரியாவிட்டாலும் கூட, இந்த பாடல் கண்டிப்பாக ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக்கும் என்பது உறுதி.

ஜி.வி.பிரகாஷ்:

ஜி.வி.பிரகாஷ்:

ஏற்கனவே விஜய்யின் தலைவா படத்திற்கு இசை அமைத்த பிரகாஷ், தற்போது நடிப்பதில் கவனம் செலுத்தி வருவதால் நிறைய படங்களை ஒப்புக் கொள்வதில்லை. எனினும் இந்த படம் இவரின் 50 வது படம் என்பதாலும், விஜய் படம் என்பதாலும் நல்ல இசையை இப்படத்தில் தருவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

சமந்தாவுடன் ஏமியும்:

சமந்தாவுடன் ஏமியும்:

இப்படத்தில் ஏமி ஜாக்சனும் இருக்கிறாராம். இப்படத்தி் ஏமி ஜாக்சனின் வேலை என்ன என்பது தெரியவில்லை. ஆனாலும், ரசிகர்களோ அதைப் பற்றிக் கவலைப்படப் போவதும் இல்லை.

அட்லீ:

அட்லீ:

ராஜா ராணி படத்திற்கு பின் அட்லீ இயக்கும் இரண்டாவது படமே விஜய்யுடன் என்பதால் மனிதர் உற்சாகத்தில் இருக்கிறார். ஆனாலும், இவரின் மனதிற்கு பிடித்த நயன்தாரா படத்தில் நடிக்கவில்லை என்பதில் வருத்தம் இருக்காம்.

English summary
Director Atlee is all set to ready to direct Actor Vijay in his 2nd movie, Music Director G.V.Pirakash joins with Vijay.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil