லோகேஷ் கனகராஜின் எல்சியூவில் ரவி மோகன்.. வரவேற்புலாம் பலமாக இருக்கே
சென்னை: லோகேஷ் கனகராஜ் கடைசியாக ரஜினிகாந்த் உள்ளிட்டோரை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கினார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை சந்தித்திருந்த அந்தப் படம் கடுமையான ட்ரோலை சந்தித்தது. அதிலும் லோகேஷை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைத்து செய்துவிட்டார்கள். அடுத்ததாக அவர் அல்லு அர்ஜுன் உள்ளிட்டோரை வைத்து படம் இயக்கவிருக்கிறார். இதற்கிடையே பென்ஸ் என்ற படத்தின் கதையையும் எழுதியிருக்கிறார். அக்கதை எல்சியூவில் ந்டிக்கிறது.
ஸ்ரீ, சந்தீப், ரெஜினா உள்ளிட்டோரை வைத்து லோகேஷ் கனகராஜ் முதன்முதலில் மாநகரம் என்ற படத்தை கடந்த 2017ஆம் ஆண்டுஇயக்கினார். படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. படத்தின் கதைக்களம், அதன் மேக்கிங், இயக்குநரின் எதார்த்தமான இயக்கம் என படத்தை பார்த்தவர்கள் இம்ப்ரெஸ் ஆகிவிட்டார்கள். முக்கியமாக இந்த இளைஞருக்கு தமிழ் சினிமாவில் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்றெல்லாம் ஆரூடம் கூறினார்கள். அடுத்ததாக அவர் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களும் ஹிட்டடித்தன.

சறுக்கிய லோகேஷ்: மீண்டும் விஜய்யை வைத்து லியோவை இயக்கினார். ஆனால் அப்படம் கொஞ்சம் சறுக்கியது. அதிலும் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக ட்ரோல் மெட்டீரியல் ஆகின. உடனடியாக தனது தவறை திருத்திக்கொள்ளவில்லை என்றால் அவர் ஃபீல்டில் நிலைப்பது கஷ்டம் என்ற பேச்சு எழுந்தது.இப்படிப்பட்ட சூழலில்தான் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கினார். கண்டிப்பாக கமலுக்கு எப்படி மெகா ஹிட்டை கொடுத்தாரோ அதேபோல்தான் ரஜினிக்கும் கொடுப்பார் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் ஏமாற்றத்தைத்தான் கொடுத்தார்.
எல்சியூ: அடுத்ததாக அவர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். மேலும் டிசி உள்ளிட்ட படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். இதற்கிடையே அவரது ஸ்பெஷாலிட்டிகளில் ஒன்றாக பார்க்கப்படுவது எல்சியூ. லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற பெயரில் லோகியே ஒரு சினிமா யுனிவர்ஸை உருவாக்கி அதில் தன்னுடைய கதாபாத்திரங்களை வைத்து தொடர்ந்து கதைகள் செய்வது ஆகும். இது ஆரம்பத்தில் ஒர்க் அவுட் ஆனது. ஆனால் லியோ படத்தில் எல்லாம் இதனை வேண்டுமென்றே திணித்த மாதிரி இருந்தது.
பென்ஸ் லோகேஷ்: சூழல் இப்படி இருக்க பென்ஸ் என்ற படத்துக்கு கதை எழுதியிருக்கிறார் லோகேஷ். அதனை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். லாரன்ஸ் லீடு ரோலில் நடிக்கிறார். இந்தக் கதை எல்சியூவில் நடக்கும்படிதான் எழுதப்பட்டிருக்கிறது. இதுவாவது எதார்த்தமாக இருக்குமா இல்லை வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டிருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்படத்தின் பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. இந்நிலையில் பென்ஸ் படத்தில் ரவி மோகன் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
சூப்பர் வரவேற்பு: இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், "யுனிவர்ஸுக்கு உங்களை வரவேற்கிறோம் ரவி மோகன் சார்" என குறிப்பிட்டிருக்கிறார். முதன்முறையாக எல்சியூவில் ரவி மோகனும் இணைந்திருப்பதால் அவருக்கு செம எக்ஸ்பீரியன்ஸ் காத்திருக்கிறது என்று ரசிகர்கள் அடித்து சொல்லிவருகிறார்கள். சொதப்பாமல் இருந்தால் சரி.


Click it and Unblock the Notifications
