இங்க பாருங்க எங்க தங்கத்த.. அல்லு அர்ஜுன் உடன் லோகேஷ் கனகராஜ்.. 1 மில்லியன் ரீல்ஸ் சாதனை!
சென்னை: புஷ்பா திரைப்படத்தின் மூலம் பாலிவுட் ரசிகர்களையும் தன் வசம் ஈர்த்த நடிகர் அல்லு அர்ஜுன் 42 ரூல்ஸ் பார்த்து தான் பேசுவார், பழகுவார் என பிரபலம் ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அல்லு அர்ஜுனின் பெயரையும் புகழையும் கெடுக்க திட்டமிட்ட சதி என ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். கடைசியாக காவேரி பருஹா பேசிய அந்த பாட் காஸ்ட்டை நீக்கி அதை நடத்திய ஸ்வீக்ரித்தி மன்னிப்பும் கேட்டு அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
தனது தம்பி அல்லு சிரிஷின் திருமண வேலைகளில் பிசியாக இருந்து வந்த அல்லு அர்ஜுனுக்கு இது திடீரென தேவையில்லாத தலைவலியாக மாறியது. இந்நிலையில், அவரை செம சில்லாக்கும் விதமாக லோகேஷ் கனகராஜ் எடுத்துக் கொண்ட செல்ஃபியை ஷேர் செய்துள்ளார்.

மேலும், அல்லு அர்ஜுன் உடன் இணைந்து அவர் பண்ணப் போகும் படத்தின் அறிவிப்பு வீடியோவே இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ரீல்ஸை தாண்டி வைரலாகி வருகிறது என்றும் அறிவித்துள்ளார்.
விஜய் பாய்ஸ் படையெடுப்பு: நடிக்ர் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில், விஜய் பாய்ஸ் என அழைக்கப்படும் அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் உள்ளிட்ட 3 முன்னணி இயக்குநர்களும் அடுத்தடுத்து அல்லு அர்ஜுனை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அட்லி ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட படத்தை உருவாக்கி வரும் நிலையில், லோகேஷ் கனகராஜ் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார்.
அல்லு அர்ஜுன் உடன் செல்ஃபி: அல்லு அர்ஜுனை சுற்றி சோஷியல் மீடியாவில் கடந்த சில நாட்களாக தேவையற்ற சர்ச்சை ஒன்று வைரலாகி வந்த நிலையில், தற்போது அதிரடியாக அவருடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். லோகியோட 7வது படமாகவும் அல்லு அர்ஜுனின் 23வது படமாகவும் உருவாகவுள்ள படம் கூடிய விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
டிசி வருது: கடந்த ஆண்டு ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக டிசி படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான டிசி படத்தின் காதலர் தின ஸ்பெஷல் வீடியோவும் டிரெண்டாகி வருகிறது. டிசி படத்தில் நடித்து முடித்த நிலையில், அல்லு அர்ஜுன் படத்தை ஆரம்பிக்கும் வேலைகளை ஸ்டார்ட் பண்ணியுள்ளார்.


Click it and Unblock the Notifications











