விஜய், அஜித்தை விட வட இந்தியாவில் தனுஷ் தான் பெரிய நடிகர்.. பளிச்சென போட்டுடைத்த பிரபலம்!
மும்பை: தமிழ் சினிமா நடிகர்களில் பாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் நடிகர் தனுஷ் தான் என விமர்சகர் உமைர் சந்து ட்வீட் போட்டுள்ளார். மேலும், தென்னிந்திய நடிகர்களில் இந்தி ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகர்கள் பட்டியலிலும் தனுஷ் இடம்பெற்றுள்ளார் எனக் கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசனை எல்லாம் இந்தியளவில் ரசிகர்கள் மட்டுமின்றி பாலிவுட் பிரபலங்களே போற்றுவதற்கு முக்கிய காரணம் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா உள்ளிட்ட ஜாம்பவான்களுடன் இணைந்து நடித்தது தான்.

ஆனால், இந்தியில் அவர்கள் தொடர்ந்து நடிக்காமல் போனதற்கு சில பாலிவுட் பிரபலங்களின் சூழ்ச்சி தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் தனுஷ் இந்திக்கு செல்லும் போது வேண்டாம் என்றும் சிலர் அட்வைஸ் பண்ணதாகவும், ஆனால், நடிப்புத்தானே என்ன ஆகிறது என்று பார்த்துவிடலாம் என ராஞ்சனா படத்திலேயே நடித்து வசூல் வேட்டை நடத்தினார் என்பதும் தான் வரலாறு.
அஜித், விஜய்யை விட: தமிழ்நாட்டில் அஜித் குமாருக்கு இருக்கும் பாக்ஸ் ஆபீஸ் மற்ற மாநிலங்களில் பெரிதாக இல்லை என்பது தான் கல நிலவரமாக உள்ளது. தளபதி விஜய்க்கு தென்னிந்தியாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. அதே போல ரஜினிகாந்தை தொடர்ந்து ஓவர்சீஸிலும் அவருக்கு பெரிய மார்க்கெட் உள்ளது. ஆனால், இவர்கள் இருவருக்குமே வட இந்தியாவில் பெரிதாக மார்க்கெட் இல்லை என உமைர் சந்து ட்வீட் போட்டுள்ளார். விஜய் மற்றும் அஜித் குமார் நேரடியாக இந்தி படங்களை பண்ணவில்லை என்றும் இந்தியில் ஒரு படம் கொடுத்தால் அவர்கள் ரேஞ்சே வேற என கமெண்ட் பக்கத்தில் விஜய், அஜித் ரசிகர்கள் உமைர் சந்துவை திட்டி வருகின்றனர்.
100 கோடி கன்ஃபார்ம்: ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ், கிருத்தி சனோன், பிரகாஷ் ராஜ் நடித்துள்ள 'தேரே இஷ்க் மே' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், தொடர்ந்து அந்த படம் பாலிவுட்டில் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை இந்தியளவில் 62 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. உலகளவில் 75 கோடி வரை படம் வசூல் ஈட்டியிருக்கும் எனக் கூறுகின்றனர். திங்கட்கிழமை சுமார் 5 கோடி ரூபாய் வரை வசூல் வந்துள்ளது. செவ்வாய்க்கிழமையும் புக் மை ஷோ டிரெண்டின்கில் அந்த படம் உள்ளதாக கூறப்படுகிறது. 2வது வார முடிவில் நிச்சயம் 100 கோடி கிளப்பில் தேரே இஷ்க் மே இணைந்துவிடும் என்கின்றனர்.

கோட் மற்றும் குட் பேட் அக்லி வட இந்தியா வசூல்?: தளபதி விஜய்யின் கடைசி படமான கோட் படம் தென்னிந்தியாவை தவிர்த்து வட இந்தியாவில் அதிகபட்சமாக 22 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தகவல் தெரிவித்துள்ளது. அஜித் குமாரின் குட் பேட் அக்லி இந்த ஆண்டு ரெஸ்ட் ஆஃப் இந்தியா வசூல் கணிப்பின் படி வெறும் 2 கோடி ரூபாய் மட்டுமே ஈட்டியிருக்கிறது. வட இந்தியாவில் சரியாக எத்தனை கோடி வசூல் செய்தது என்பது குறித்த தகவல்கள் பெரிதாக இல்லை.
இந்தி ரசிகர்களை கவர்ந்த தென்னிந்திய நடிகர்கள்: அல்லு அர்ஜுன், பிரபாஸ் மற்றும் தனுஷ் ஆகிய 3 தென்னிந்திய ஹீரோக்கள் மட்டுமே இந்தியில் ஏகப்பட்ட ரசிகர்களின் விருப்ப ஹீரோக்களாக உள்ளனர் என உமைர் சந்து மற்றொரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











