படப்பிடிப்பின் போது தீடிரென குவிந்த ரசிகர்கள்.. கெத்து காட்டிய 80களின் ஹீரோ
கொச்சி : நடிகர் ரஹ்மான் 80 மற்றும் 90களின் சிறப்பான ஹீரோவாக இருந்து ஏராளமான ரசிகைகளை கொண்டிருந்தவர்.
தற்போது இவர் மீண்டும் படங்களில் அதிகமாக நடித்து பிசியாக காணப்படுகிறார்.
சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற சூட்டிங்கில் ஏராளமான ரசிகர்கள் இவரைக் காண கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் ரஹ்மான்
நடிகர் ரஹ்மான் கடந்த 1980களில் நாயகனாக மட்டுமின்றி குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தோன்றி சிறப்பான பல வெற்றிப் படங்களை அடுத்தடுத்து கொடுத்தவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை குறிப்பாக ரசிகைகளை கொண்டிருந்தவர்.

பிசியாக நடித்துவரும் ரஹ்மான்
தற்போது மீண்டும் தனது இன்னிங்சை துவங்கியுள்ள ரஹ்மான், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த துருவங்கள் பதினாறு படம் தந்த வெற்றி திரையுலகில் மீண்டும் அவரை நாயகனாக முன்னிறுத்தியுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்
மேலும் தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்துள்ளார் ரஹ்மான். பாலிவுட்டில் மூன்று முறை தேசிய விருது பெற்ற விகாஸ் பால் இயக்கத்தில் இரண்டு பாகங்கள் கொண்ட பிரம்மாண்ட படைப்பான கண்பத் என்ற இந்தி படத்தின்மூலம் பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

புத்துயிர் பெற்ற ரசிகர்கள் மன்றங்கள்
அடுத்ததாக துருவங்கள் பதினாறு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் நிறங்கள் மூன்று படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக நடிக்கிறார். இவரது ரசிகர்கள் மன்றங்கள் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. சமீபத்தில் கேரளாவில் விபத்தில் சிக்கிய தனது ரசிகர் ஒருவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துள்ளார் ரஹ்மான்.

குவிந்த ரசிகர்கள்
இதனிடையே இன்றைய தினம் மலையாளத்தில் எதிரே என்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதையடுத்து அவரை காண ஏராளமான ரசிகர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் குவிந்தனர். தொடர்ந்து அனைத்து ரசிகர்களையும் சந்தித்து பேசியுள்ளார் ரஹ்மான். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

80களின் கனவு நாயகன்
80களின் கனவு நாயகனாக வலம்வந்தவர் ரஹ்மான். அமலா, நதியா என அப்போதைய நாயகிகளுக்கு ஈடுகொடுத்து நடித்தவர். ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்தவர். அவர் தற்போது மீண்டும் சிறப்பான இன்னிங்சை துவங்கியுள்ளதன்மூலம் தான் எப்போதும் கெத்துதான் என்பதை நிரூபித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











