காதலில் வெற்றிக் கொடி கட்டிய கோலிவுட் நடிகர்கள்

By Siva

சென்னை: நடிகர்கள் காதலில் விழுவது சகஜம். ஆனால் அதில் எத்தனை பேர் காதலியையே மணக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.

நடிகர்கள் காதலில் விழுந்தார்கள் என்று ஏகப்பட்ட செய்திகள் வரும். அதில் விரல் விட்டு எண்ணும் பேர் தான் காதலித்த பெண்ணையே மணந்திருப்பார்கள். அப்படி காதலியை மனைவியாக்கிய நடிகர்களில் சிலரைப் பார்க்கலாம்.

காதலி சங்கீதாவை மணந்த விஜய்

காதலி சங்கீதாவை மணந்த விஜய்

லண்டனில் வசித்த இலங்கை தமிழர் குடும்பத்தைச் சேர்ந்த சங்கீதாவை காதலித்த விஜய் பெற்றோர் சம்மதத்துடன் அவரை மணந்தார். தற்போது அவர்களுக்கு ஜேசன் சஞ்சய், திவ்யா ஷாஷா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஷாலினியை கரம் பிடித்த அஜீத்

ஷாலினியை கரம் பிடித்த அஜீத்

அஜீத் குமார் அமர்க்களம் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ஷாலினியைக் காதலித்தார். பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகள் உள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடந்த சூர்யா-ஜோ திருமணம்

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடந்த சூர்யா-ஜோ திருமணம்

சூர்யா-ஜோதிகா காதலிக்கிறார்கள் என்று நீண்டடட காலமாக பேசப்பட்டது. ஆனால் அவர்கள் திருமணம் இழுத்துக் கொண்டே போய் ஒரு வழியாக நடந்தது. அவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.

சரிதாவை மணந்த மாதவன்

சரிதாவை மணந்த மாதவன்

மாதவன் மாதிரி க்யூட்டான கணவன் வேண்டும் என்று பல பெண்கள் நினைப்பதுண்டு. அத்தகைய மாதவனை தனது காதல் வலையில் விழ வைத்தவர் ஏர் ஹோஸ்டஸாக இருந்த சரிதா. மாதவனும் சமத்துப் பிள்ளையாய் காதலியை மனைவியாக்கினார். அவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார்.

ஜெயம் ரவிக்கும் லவ் மேரேஜ் தான்

ஜெயம் ரவிக்கும் லவ் மேரேஜ் தான்

ஜெயம் ரவி தனது காதலியான ஆர்த்தியை மணந்தார். அவர்களுக்கு ஆரவ் என்ற மகன் உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X