20 லட்சத்துல இருந்து இத்தனை கோடியா?.. ஓவர் நைட்டில் ஒபாமாவான ’லவ்வர்’ மணிகண்டன்.. இன்னும் எகிறும்!

சென்னை: விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக பங்கேற்று ஹீரோவான சிவகார்த்திகேயன் போல மணிகண்டனும் அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்தார். பின்னர் டப்பிங் ஸ்டுடியோவில் குரல் கொடுக்கத் தொடங்கிய அவர், 2013 ஆம் ஆண்டு வெளியான பீட்சா 2 படத்தில் சிறு வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான், விஷ்ணு விஷால் நடித்த இன்று நேற்று நாளை, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காதலும் கடந்து போகும், வெற்றி நடிப்பில் வெளியான 8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார்.

Lover Manikandan hikes his salary from 20 Lakhs to 2 Crores?

சில்லுக்கருப்பட்டி முதல் ஜெய்பீம்: காலா படத்துக்கு வசனம் எழுதி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இவர்தான். ஹலிதா ஷமிம் இயக்கத்தில் வெளியான சில்லு கருப்பட்டி திரைப்படத்தில் தான் ஒரு கதைக்கு ஹீரோவாக அப்கிரேட் ஆனார். ஏலே, நயன்தாராவின் நெற்றிக்கண், சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற பல படங்களில் நடித்து வந்த மணிகண்டன் ஜெய்பீம் படத்தில் ராசாக்கண்ணு கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் தனது நடிப்பால் கவனிக்க வைத்தார். ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட அந்த படத்தை பார்த்த பல வெளிநாட்டினரும் அவரது நடிப்பை பாராட்டினர்.

குட் நைட் தந்த வெற்றி: கடந்தாண்டு மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் திரைப்படம் ஹீரோவாக அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. சுமார் 5 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் வெளியான அந்த படம் நல்ல வசூலை ஈட்டி விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களை அள்ளியது. அதே தயாரிப்பு நிறுவனம் மீண்டும் மணிகண்டனை வைத்து தயாரித்த லவ்வர் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சம்பளத்தை உயர்த்திய மணிகண்டன்: லவ்வர் திரைப்படம் வரை மணிகண்டன் வெறும் 20 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கி வந்ததாகவும், ஆனால் அடுத்த படத்திற்கு அவர் அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மணிகண்டன் நடிப்பில் வெளியாகும் படங்கள் 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வரும் நிலையில், தாராளமாக அவருக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் தரலாம் என்றும் மற்ற இளம் நடிகர்கள் 20 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் கேட்டு வரும் நிலையில், மணிகண்டன் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தால் தனது சம்பளத்தை மேலும் அதிகரிப்பார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X