Bestie தப்பான விஷயம் கிடையாது.. கல்யாணம் ஆனாலும் பொண்ணுங்க ஆண்களோட பழகலாம்.. மணிகண்டன் பேச்சு!
சென்னை: பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் என அனைத்திலும் தனது காதலியை காதலன் சந்தேகப்படுவது போலவும் அசிங்கமாக திட்டுவது போன்றும் பாய் பெஸ்ட்டிகளால் ஏற்படும் தொல்லைகளையே காட்சிப்படுத்தியிருப்பதாகவே காட்டியுள்ளனர். இந்நிலையில், பெஸ்டி குறித்த விளக்கத்தை மணிகண்டன் கூறியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடந்த ஆண்டு குட் நைட் படத்தில் மணிகண்டன் நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. குறைவான பட்ஜெட்டில் நல்ல படங்களை கொடுத்தும் ரசிகர்களை தியேட்டருக்கு கொண்டு வரலாம் என்பதை உறுதியாக நம்பும் மணிகண்டன் அதனை செயல்படுத்தியும் வருகிறார்.

கவினுக்கும் எனக்கும் போட்டியா?: தமிழ் சினிமாவில் காலம் காலமாக 2 நடிகர்கள் போட்டி என்பதை மையப்படுத்தி செல்வதை நான் ஆதரிக்கவில்லை. கவினுக்கும் எனக்கும் போட்டின்னு சொல்றாங்க, தமிழ் சினிமாவில் பல நல்ல கதைகளுடன் இயக்குநர்கள் படங்களை இயக்க காத்துக் கொண்டிருக்கின்றனர். 10 ஹீரோக்கள் தான் ஷைன் ஆகின்றனர். அதிலும், 2 பேர் என பந்தயம் வைக்காமல் 30 முதல் 40 ஹீரோக்கள் போட்டி போட்டால் கூட தமிழ் சினிமாவுக்கு அது ஆரோக்கியம் தான். எல்லோருடைய படத்தையும் பார்க்க ரசிகர்கள் வரவேண்டும் என பேசியிருந்தார்.
பெஸ்டி தப்பான விஷயமா?: சமீப காலமாகவே சினிமாவில் பெஸ்டி எனும் கதாபாத்திரம் வைத்தே ஆக வேண்டும் என்பது போல படங்கள் உருவாகி வருகின்றன. பெஸ்டி என்றால் நல்ல நண்பன் மற்றும் தோழி தான். பாய் பெஸ்டியை வில்லனாகவே சித்தரிக்க ஆரம்பித்து விட்டார்கள். என்னுடன் எல்கேஜியில் இருந்து படித்த தோழிகள் இன்னமும் டச்சில் இருக்காங்க, அவங்களாம் இல்லைன்னா நான் நிறைய விஷயத்தை இழந்திருப்பேன். பெண்களை ஆண்கள் நம்பினால் இந்த பெஸ்டி பிரச்சனையே வராது. திருமணமான பெண்கள், ஆண்கள் அனைவரும் நண்பர்களுடன் பழகுவதில் எந்தவொரு தவறும் இல்லை. அந்த நட்புக்கு ஏகப்பட்ட பெயர்களை வைத்துக் கொண்டு அதை ஏதோ தப்பான உறவு போல சித்தரிப்பது தான் தவறு என மணிகண்டன் பளிச்சென உடைத்து பேசியிருக்கிறார்.
லவ்வர் கதையே அதுதானா?: காதலர்களுக்குள் எழும் சந்தேகங்களும், காதலியை சந்தேகிக்கக் கூடாது என்கிற கருத்துடன் தான் லவ்வர் படம் இருக்கும் என்பது மணிகண்டனின் பேட்டி மற்றும் படத்தின் டிரெய்லரை பார்த்தாலே ஊகிக்க முடிகிறது. இந்த வாரம் லால் சலாம் படத்துடன் மோதவுள்ள லவ்வர் படம் ஹிட் அடிக்குமா? என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











