லுங்கி டான்ஸ் நாட்டியா, ஸ்வீட்டா இருக்கு: ஷாருக்கை பாராட்டிய ரஜினி
மும்பை: சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் வரும் லுங்கி டான்ஸ் பாடலை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் ஷாருக்கானுக்கு போன் செய்து பாராட்டினாராம்.
ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்துள்ள சென்னை எக்ஸ்பிரஸ் படம் நாளை ரிலீஸாகவிருக்கிறது. இந்த படத்தில் வரும் லுங்கி டான்ஸை ஷாருக்கான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு டெடிகேட் செய்துள்ளார். இந்நிலையில் இந்த பாடலை பார்த்த ரஜினி ஷாருக்கானுக்கு போன் செய்து அவரை பாராட்டியுள்ளார்.
இது குறித்து ஷாருக்கான் செய்தியாளர்களிடம் பேசினார்.

ரஜினி போன் செய்தார்
கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் எனக்கு போன் செய்தார். என்னுடைய லுங்கி டான்ஸ் பாடலை யூடியூப்பில் பார்த்துள்ளார். டான்ஸ் நன்றாகவும், குறும்புத்தனமாகவும் உள்ளது என்றார்.

ரஜினி சாருக்கு சந்தோஷம்
என் பாடலை பார்த்து ரஜினி சார் சந்தோஷப்பட்டதால் நானும் சந்தோஷமாக உள்ளேன் என்றார்.

நீங்களே பெரிய ஸ்டார்
ஏன் சார் இப்படி செய்கிறீர்கள்? நீங்களே பெரிய ஸ்டாராச்சே என்று ரஜினி என்னிடம் தெரிவித்தார் என ஷாருக்கான் கூறினார். இந்த பாடலை ரஜினி சாருக்கு டெடிகேட் பண்ணாவிட்டால் சென்னை எக்ஸ்பிரஸ் முழுமையானதாக இருந்திருக்காது என்றார் ஷாருக்.

ரஜினிக்கு ஐஸ்
ஷாருக்கான் சென்னை எக்ஸ்பிரஸ் பட விளம்பர நிகழ்ச்சிகளில் மறக்காமல் ரஜினியைப் பற்றி பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











