Actor Rajinikanth: குறி வச்சாச்சு.. அக்டோபரில் வெளியாகும் வேட்டையன்.. அறிவிப்பு வெளியிட்ட லைகா!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களின் நடித்துவரும் படம் வேட்டையன். இந்தப் படத்தை முன்னதாக ஜெய் பீம் படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த டிஜே ஞானவேல் இயக்கி வருகிறார். இந்த படம் போலி என்கவுண்டருக்கு எதிரான படம் என்றும் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் மிகப்பெரிய வசூலையும் வரவேற்பையும் கொடுத்தது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான லால் சலாம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றதுடன் வசூலிலும் சொதப்பியது. இந்நிலையில் தற்போது வேட்டையன் படம் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் இந்த மாதத்துடன் நிறைவடைய உள்ளதாக பட குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர், லால் சலாம் படங்களை தொடர்ந்து தற்போது அவர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் இந்த மாதத்தில் நிறைவடைய உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வேட்டையன் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை நிறைவு செய்துவிட்டு வரும் ஜூன் மாதத்தில் தலைவர் 171 படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இணையுள்ளார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள சூழலில் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்நிலையில் தற்போது வேட்டையன் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
வேட்டையன் ரிலீஸ் அப்டேட்: குறி வச்சாச்சு என்று பதிவிட்டுள்ள லைகா நிறுவனம் வரும் அக்டோபரில் வேட்டையன் படம் ரிலீசாகவுள்ளதாக தனது பதிவில் அறிவித்துள்ளது. மேலும் சிறப்பான ரஜினியின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான ரஜினியின் லால் சலாம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தில் ரஜினிகாந்த் கேமியா ரோலில் நடித்திருந்தாலும் அவரது படமாகவே இந்த படம் பார்க்கப்பட்டது. இந்நிலையில் ரஜினியின் அடுத்த படமான வேட்டையன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் மாதத்தில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது எதிர்பார்ப்புகளை எகிற செய்துள்ளது.
இயக்குநர் டிஜே ஞானவேல்: வேட்டையன் போலி என்கவுண்டருக்கு எதிரான படம் என்றும் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஜெய்பீம் படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளார் டிஜே ஞானவேல். இந்நிலையில் அவரது வேட்டையன் படமும் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதத்திற்குள் இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவு செய்யப்பட்டு படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன்ஸ் வேலைகள் துவங்க உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் ரிலீஸ்: முன்னதாக தீபாவளியையொட்டி படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியான சூழலில் தற்போது அதை நிரூபிக்கும் வகையில் படம் அக்டோபர் மாதத்தில் வெளியாகவுள்ளதாக லைகா அறிவித்துள்ளது. படத்தில் 33 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இணைந்துள்ளதும் படத்திற்கான ப்ளஸ்ஸாக பார்க்கப்படுகிறது. படத்தில் மேலும் மஞ்சு வாரியர், ரித்திகா உள்ளிட்ட நாயகிகளும் இணைந்துள்ள சூழலில், ரஜினிக்கு யார் ஜோடியாகியுள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











