சந்தீப் கிஷன் பிறந்தநாள்.. விஜய் மகன் டைரக்ட் பண்ற அழகே அசத்தலா இருக்கே.. சந்தோஷத்தில் லைகா!
சென்னை: தளபதி விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்லப்போகிறாரே என ரசிகர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அசத்தல் என்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார். இந்தியன் 2, விடாமுயற்சி படங்களின் தோல்வியால் துவண்டு கிடந்த லைகா நிறுவனம் தற்போது மீண்டும் ஆக்டிவாக மாறி அப்டேட் வெளியிட்டு இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் லைகாவுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அதன் 2ம் பாகம் ஓரளவுக்கு வெற்றியை பெற்றது. ஆனால், அதன் பின்னர் லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வெளியான லால் சலாம், வேட்டையன் படங்கள் பெரிதாக பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கொடுக்கவில்லை.

அதே போல கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் அஜித் குமாரின் விடாமுயற்சி உள்ளிட்ட படங்களும் பெரிய பள்ளத்தை தோண்டிவிட்டன. இந்தியன் 3 படம் வெளியாகுமா? என்பதே கேள்விக்குறியாக மாறி நிற்கும் நிலையில், லைகா தயாரிக்கும் தொழிலையே விட்டுவிட்டு வெறும் பிசினஸில் மட்டும் ஃபோகஸ் பண்ணப் போவதாக ஏகப்பட்ட பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் அடிபட்டன.
சந்தோஷத்தில் லைகா: இந்த ஆண்டு லைகா நிறுவனம் தயாரிப்பில் மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான எம்புரான் திரைப்படம் 250 கோடி வரை வசூல் செய்து வெற்றியை கொடுத்தது. அதன் காரணமாக சந்தோஷத்தில் உள்ள லைகா நிறுவனம் மீண்டும் பழையபடி தனது பெரிய நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரிக்கும் முடிவை எடுத்திருப்பதாக கூறுகின்றனர். லைகா தயாரிப்பில் உருவாகி வரும் ஜேசன் சஞ்சய் படத்தின் மேக்கிங் டீசரை தற்போது வெளியிட்டுள்ளனர்.
சந்தீப் கிஷன் பிறந்தநாள்: நடிகர் சந்தீப் கிஷன் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் படத்தின் மேக்கிங் வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டு சந்தீப் கிஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. 1987ம் ஆண்டு மே 7ம் தேதி சென்னையில் பிறந்தவர் தான் சந்தீப் கிஷன். 2010ம் ஆண்டு தெலுங்கில் வெளியான பிரஸ்தனம் படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் யாருடா மகேஷ் படத்தின் மூலம் 2013ம் ஆண்டு அறிமுகமானார்.
லோகேஷ் கனகராஜ் முதல் ஜேசன் சஞ்சய் வரை: இதுவரை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் 31 படங்களில் நடித்துள்ள சந்தீப் கிஷன் அதிகபட்சமாக இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான மாநகரம் படத்திலும் இவர்தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் படத்திலும் இவர்தான் ஹீரோ.
ஹீரோவாகவே நடிக்கலாம்: தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அப்பாவை போல ஹீரோ ஆகாமல் தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகர் போல இயக்குநராக அறிமுகமாகவுள்ள நிலையில், அவரை பார்த்த ரசிகர்கள் பேசாம நீங்களே ஹீரோவாக நடிச்சிருக்கலாம் என கமெண்ட் போட்டு வருகின்றனர். ஜேசன் சஞ்சயை வைத்து லைகா தயாரிப்பில் புரொடக்ஷன் வேல்யூவுடன் ஒரு படத்தை இயக்கி வருகிறார் ஜேசன் சஞ்சய்.


Click it and Unblock the Notifications











