பிரியா ஆனந்துடன் டூயட் பாட ஆசைப்படும் அட்டி ஹீரோ மா.கா.பா. ஆனந்த்

By Mayura Akilan

டிவி தொகுப்பாளர் மா.கா.பா. ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் படம் அட்டி. தனது படங்களை பார்க்க குடும்பம், குடும்பமாக மக்கள் வரவேண்டும் என்று விரும்புகிறார் மா.கா.பா ஆனந்த். பெரிய ஹீரோயின்களுடன் ஜோடி சேர ஆசைப்படாவிட்டாலும், தனது கனவுக்கன்னி பிரியா ஆனந்துடன் நடிக்க ஆசைப்படுகிறார் ஆனந்த்.

கழுகு கிருஷ்ணாவுடன் ‘வானவராயன் வல்லவராயன்' என்ற படத்தில் இரண்டாவது ஹீரோவாக தமிழ் திரை உலகில் அறிமுகமான மா.கா.பா ஆனந்த், ‘பஞ்சுமிட்டாய்' என்ற படத்தில் சோலோ ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் புதுமுக இயக்குனர் விஜய் பாஸ்கர் இயக்கும் ‘அட்டி' என்ற புதிய படத்திலும் நடிக்கிறார் மா.கா.பா.

ஈ5 எண்டெர்டெயின்மென்ட் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

இவர் ஏற்கெனவே ‘அரிது அரிது', ‘ஈசா' ஆகிய இரண்டு தமிழ் திரைபடங்களை தயாரித்துள்ளார். இப்போது இமேஜினரி மிஷன் நிறுவனத்தின் கார்த்திகேயன் அவர்களுடன் இணைந்து ‘அட்டி' என்கிற தமிழ் திரைப்படத்தை தயாரிக்கிறார்.

மா.கா.பா ஆனந்த்

மா.கா.பா ஆனந்த்

அட்டி படத்தின் கதாநாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக அஷ்மிதா, மற்றும் முன்னணி கதாபாத்திரத்தில் ராம்கியும் நடிக்கின்றார்.

அறிமுக இயக்குநர்

அறிமுக இயக்குநர்

இந்தப் படத்தின் இயக்குனர் விஜயபாஸ்கர் ‘மாப்பிள்ளை', ‘அலெக்ஸ் பாண்டியன்' ஆகிய படங்களில், இயக்குனர் சுராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இப்போதுதான் முதன்முறையாக ‘அட்டி' என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

நாயகனின் பிரச்சினை

நாயகனின் பிரச்சினை

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் வாட்டர் சப்ளை கடை வைத்திருக்கும் கதாநாயகன் மற்றும் நண்பர்கள் பற்றிய கதை இது. சந்தோஷமாக வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு எதிர்பாராமல் ஒரு பிரச்சனை வருகிறது.

காமெடி கதை

காமெடி கதை

தனக்கு வந்த பிரச்சனையை கதாநாயகன் எப்படி சாதூர்யமாக சமாளித்தார் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சித்தரிக்கும் பொழுதுபோக்கு திரைப்படம்தான் இந்த ‘அட்டி'...

தொழில் நுட்ப கலைஞர்கள்

தொழில் நுட்ப கலைஞர்கள்

இதன் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் அர்ஜூன். இவர் ‘மெய்யழகி' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர். இத்திரைப்படம் அவரின் அடுத்த படைப்பு. எடிட்டர் ராஜேஷ், இவர் ‘வேலையில்லா பட்டதாரி', ‘சலீம்' ஆகிய திரைப்படத்தின் படத் தொகுப்பாளார்.

சுந்தர் சி. பாபு

சுந்தர் சி. பாபு

சித்திரம் பேசுதடி', ‘அஞ்சாதே', ‘நாடோடிகள்' ஆகிய வெற்றி படங்களின் இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு தான் அட்டி படத்துக்கும் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் பாடல்களை மதன்கார்க்கி, சினேகன், அண்ணாமலை, விஜயசாகர், கவிவர்மன் மற்றும் கானா வினோத் ஆகிய முன்னணி பாடலாசிரியர்கள் எழுதி உள்ளனர்.

முன்னணி கதாநாயகர்களின் சண்டைப் பயிற்சி ஆசானாக விளங்கும் பவர் பாண்டியன் மாஸ்டர் இதில் சண்டை பயிற்சி இயக்குனராக பணிபுரிகிறார்.

முகம் சுளிக்க வைப்பதா?

முகம் சுளிக்க வைப்பதா?

இந்த படம் குறித்து கருத்து கூறியுள்ள அட்டி ஹீரோ மா.கா.பா ஆனந்த், இளைஞர்கள் எனது படத்திற்கு அதிகம் வரவேண்டும் என்று விரும்பினாலும், குடும்பம் குடும்பமாக அனைவரும் எனது படத்தை பார்க்க வரவேண்டும் என்று விரும்புவதாக கூறினார். இதனால் இரட்டை அர்த்த வசனங்கள் வராமல் பார்த்துக்கொள்வேன் என்றார்.

பிரியா ஆனந்துடன் டூயட்

பிரியா ஆனந்துடன் டூயட்

எனது கனவுக்கன்னி பிரியா ஆனந்த். என கனவு நனவாகும் விதத்தில் அவருடன் டூயட் பாடினாலும் ஆச்சரியமில்லை. எல்லாமே காலத்தின் கையில்தான் உள்ளது.

பெரிய ஹீரோயின்கள்

பெரிய ஹீரோயின்கள்

பெரிய ஹீரோயின்களுடன் இணைந்து நடிக்கவேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கு இல்லை. நடிப்பில் மட்டுமே இப்போது எனது முழு கவனமும் இருக்கிறது என்கிறார் அட்டி ஹீரோ மா.கா.பா ஆனந்த்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X