என்னப்பா இவரு இப்படி நடிக்கிறாரு... வாயை பிளந்த வெங்கட் பிரபு.. நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா!

சென்னை: வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் எஸ்.ஜே.சூர்யா. குஷி, அன்பே ஆருயிரே, நியூ, இசை போன்ற படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கும் படங்களில் நடித்தாலும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி படம் தான் அவருக்கு சிறந்த நடிகருக்கான அங்கீகாரத்தை வழங்கியது. தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்றால் எஸ்.ஜே.சூர்யா தான். அவர் நடிப்பை பார்த்து என்னப்பா இந்த மனுஷன் இப்படி நடிக்கிறார் என திரை ரசிகர்கள் மலைத்து பார்க்க தொடங்கியுள்ளனர். தற்போது அவர் வில்லனாக நடித்த மாநாடு படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

நடிப்பு அரக்கன்: மாநாடு படத்தின் டிரெய்லரில் இடம்பெற்ற எஸ்.ஜே.சூர்யாவின் வசனம் டிரெண்டிங் ஆனது. வந்தான்... சுட்டான்.. செத்தான்.. ரிப்பீட்டு வசனம் அனைவரிடத்திலும் கைதட்டலை பெற்றது. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் கலக்கியிருப்பார். இதை பார்த்த திரை ரசிகர்கள் நடிப்பு அரக்கன் என்றே தெரிவித்தனர். கேம் சேஞ்சர், இந்தியன்2 போன்ற படங்களில் வில்லனாக வந்து மிரட்டினார். அதைத்தொடர்ந்து வீர தீர சூரன், எல்ஐசி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

Maanaadu movie making video trending for sj surya acting

மாநாடு வாய்ப்பு: வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ கொடுத்த பணம் விரையம் ஆகாது. 2.30 மணி நேரத்தில் பைட்டு, பாட்டு, சோகம், ஜாலியான ஒரு அனுபவம் கிடைக்கும். மாநாடு படம் வெங்கட் பிரபுவிற்கு மட்டும் அல்ல, எஸ்.ஜே.சூர்யாவிற்கும் மிகப்பெரிய பிரேக் கொடுத்த படமாக இருக்கிறது. ரசிகர்களுக்கு பிடித்த படங்களின் லிஸ்டில் மாநாடு உள்ளது. ஆனால், இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது பசுபதி தானாம். ஆனால், அப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது.

பின்பு ரவி தேஜா மற்றும் கிச்சா சுதீப்பிடம் வெங்கட் பிரபு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஏற்கனவே நான் ஈ படத்தில் கிச்சா சுதீப் வில்லனாக நடித்து ஹிட்டடித்து இருந்தார். ஆனால் அவருக்கு இப்படத்தின் கதை பிடித்தும் கால்ஷூட் பிரச்னையால் நடிக்க முடியாமல் போனதாம். பிறகு அரவிந்த்சாமியை நடிக்க வைக்க திட்டமிட்டனர். அவரும் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதைத்தொடர்ந்து தான் எஸ்.ஜே.சூர்யா டிசிபி தனுஷ்கோடியாக மாநாடு படத்தில் நடித்து அசத்தி இருந்தார். நல்ல வேளை மத்த யாரும் நடிக்கலை என்று ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு எஸ்.ஜே.சூர்யா பிரமாதப்படுத்தியிருப்பார்.

Maanaadu movie making video trending for sj surya acting

பாராட்டு: திரை பிரபலங்கள் பலரும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பார்த்து அசந்து போனார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் கமல்ஹாசன், விஜய் என அனைவரும் பாராட்டி பேசியிருந்தனர். இப்படத்திற்காக விருது வாங்கும் விழாவில் எஸ்.ஜே.சூர்யாவின் ஆஸ்தான குரு இயக்குநர் வசந்த் பாராட்டி பேசியிருப்பார். அதில், சூர்யா சிறந்த நடிகர் என்பது அப்போதே தெரியும். இவர் நடிக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம். நல்ல நடிகர் மட்டும் அல்ல சிறந்த மனிதர் என்றும் பாராட்டியிருந்தார்.

அசந்து போன வெங்கட் பிரபு: தற்போது மாநாடு படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் டிரெண்டாகி ருகிறது. சிம்பு, பிரேம்ஜி மற்றும் அவரது நண்பர்கள் போலீசிடம் சிக்கி கொள்ளும் காட்சியில் டிசிபி தனுஷ்கோடி என்ட்ரி கொடுத்து மிரட்டும் காட்சியை பார்த்து என்னப்பா இவரு இப்படி நடிக்கிறார் என மிரண்டு போய்விட்டார் வெங்கட் பிரபு. தற்போது இதுதொடர்பான காட்சி டிரெண்டாகி வருகிறது. பக்கம் பக்கமாய் வசனம் பேசி மாடுலேஷனை மாத்தி எஸ்.ஜே.சூர்யா மிரட்டியுள்ளார். ஸ்பைடர் படத்தில் ஒரு நடிப்பு என்றால் மாநாட்டில் வித்தியாசம் காட்டியிருப்பார். கொரோனா காலத்தில் மாநாடு 100 நாட்கள் ஓடி வெற்றியடைந்தது. சிம்புவிற்கு பிரேக் கொடுத்த படம் என்றே குறிப்பிடலாம். வெங்கட் பிரபுதான் இப்படத்தை இயக்கியிருந்தாரா என்றே வாயை பிளக்க ஆரம்பித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X