ஒரே தருணத்தில் மீண்டும் மீண்டும் வாழும் சிம்பு… மாநாடு ஸ்னீக் பீக்!
சென்னை : சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி உள்ளது.
மாநாடு திரைப்படம் நவம்பர் 25ந் தேதி நாளை திரையரங்கில் வெளியாக உள்ளது.
சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார், வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.

மாநாடு
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாநாடு'. இத்திரைப்படம் யுஏ சான்றிதழை பெற்றுள்ளது. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, பாரதி ராஜா, ஒய்ஜி மகேந்திரன், மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர்.

சிம்பு கண்கலங்கினார்
சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள மாநாடு திரைப்படத்திற்கு யுவுன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சிம்பு , இந்த படம் வெளியாகக் கூடாது என்று பல பிரச்சினைகள் வந்ததாகவும், நிறைய கஷ்டங்களை பலர் கொடுத்ததாகவும் கண்கலங்கினார். மேலும், பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்னை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சிம்பு கண்ணீர் விட்டார்.
Recommended Video

வசூல் பாதிக்குமா
ஒருவழியாக பிரச்சினை முடிந்தது என நினைத்த நிலையில், திரையரங்குக்கு வருபவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என தமிழக அரசு நிபந்தனை விதித்திருப்பது மாநாடு படத்தின் வசூலைப் பாதிக்கும் என்று மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கருதுகிறார்.
ஸ்னீக் பீக்
இந்நிலையில்,மாநாடு திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் சிம்புவுக்கு ஒரே நாளில் நடந்த விஷயங்கள் திரும்ப திரும்ப டைம் லூப் முறையில் நடந்து கொண்டே இருக்கிறது. இதில் டைம் லூப் என்பது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் சிக்கி அதில் மீண்டும் மீண்டும் வாழுவது. ஒரே தருணத்தில் மீண்டும் மீண்டும் வாழும் ஒரு நபரின் வாழ்க்கையை ஒரு டைம் லூப் உருவாக்குகிறது.


Click it and Unblock the Notifications











