மாநகரம் ஸ்ரீக்கு வந்த நிலைமை.. மனசு உடைந்துப்போன ரசிகர்கள்.. ஆபாச மெசேஜ்களை பார்த்தாலே பதறுதே!
சென்னை: வழக்கு எண் 18/9 படத்தில் நடித்த ஸ்ரீயா இப்படி மாறிவிட்டார் என்றும் மாநகரம், கடைசியாக இறுகப்பற்று படத்தில் கூட சானியா ஐயப்பனுக்கு ஜோடியாக செமையாக நடித்திருந்தாரே திடீரென இப்படி ஆபாச வீடியோக்களை போட என்ன காரணம் என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். மேலும், ஆடையில்லாத அவரை உடலை பார்த்த ரசிகர்கள் போதைப் பழக்கத்திற்கு ஸ்ரீ அடிமையாகி விட்டாரா என்றும் லோகேஷ் கனகராஜ் காப்பாத்த வேண்டும் என்றும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்ட போது அப்படி ஷை டைப்பாக யாரிடமும் பேசாமல் இருந்த ஸ்ரீயா இது என தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், அதற்கு அடிமையாகி விட்டாரா ஸ்ரீ என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே ஸ்ரீ தலையில் கலரிங் செய்துக் கொண்டு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இது ஏஐ வீடியோவா அல்லது உண்மையாகவே ஸ்ரீ தானா என்கிற சந்தேத்தையும் ரசிகர்கள் கிளப்பி வந்தாலும், அவரது உண்மையான நிலைமையை பார்த்து பலரும் அதிர்ச்சியாகி விட்டனர்.
2012 முதல் 2024 வரை: கடந்த ஜூன் 2012ம் ஆண்டு எப்படி இருந்தேன், 2024ல் எப்படி இருக்கிறேன் என கடைசியாக கடந்த ஆண்டு ஒரு போட்டோவை ஷேர் செய்திருந்தார் ஸ்ரீ. அப்போது கூட அவரது தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் தென்படவில்லை. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வழக்கு எண் 18/9 படத்தில் வேலு எனும் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் தான் ஸ்ரீ.
சிறப்பான நடிப்பு: மிஷ்கின் இயக்கத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன் பப்படி, வில் அம்பு படத்தில் நடித்து வந்த நடிகர் ஸ்ரீக்கு லோகேஷ் கனகராஜின் அறிமுக படமான மாநகரம் படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜின் ரேஞ்ச் எங்கேயோ சென்றது. ஆனால், அதில் நடித்த ஸ்ரீக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை. கடைசியாக 2023ம் ஆண்டு இறுகப்பற்று படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், ஏற்பட்ட விரக்தி தான் ஸ்ரீ இப்படி மாற காரணம் என்கின்றனர்.
ஆபாச மெசேஜ்கள்: ஆண்கள் மற்றும் பெண்கள் ஆபாசமாக பேச வேண்டும் என்றால் தன்னை அணுகுங்கள் என்றும் நட்பு பாராட்டலாம் என்றும் ஸ்ரீ பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவுகள் ரசிகர்களை அதிர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது. சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, பிரதீப் ரங்கநாதன், மணிகண்டன், கவின் உள்ளிட்டோர் கஷ்டப்பட்டு நடிக்க ஆரம்பித்து தொடர்ந்து சினிமாவில் போராடி வரும் நிலையில், ஸ்ரீ தனது போராட்டத்தை கைவிட்டு விட்டாரா என்றும் அல்லது சினிமா இவரை கைவிட்டு விட்டதா? ஏன் ஒரு நல்ல நடிகர் இந்தளவுக்கு மோசமாகிவிட்டார் என்றும் அவருக்கு சரியான ட்ரீட்மெண்ட் கொடுத்து குணப்படுத்த வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். சினிமா கனவு பல இளைஞர்களை தவறான பாதைகளுக்கு இட்டுச் செல்கிறது என்றும் சிலர் மட்டுமே இங்கே நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர் என்கிற உண்மையை இளைஞர்கள் உணர வேண்டும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











