களத்தில் குதிக்க தயாராகும் ‘மாறன்‘... இறுதிகட்டபடப்பிடிப்பு தொடக்கம்!
சென்னை : தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்படத்தின் இறுதி கட்டபடப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்முருதி வெங்கட் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாறன்
தனுஷ், தனது 43 வது படமாக தற்போது "மாறன்" படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை மாபியா, துருவங்கள் 16 படங்களின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார். இந்த படத்திற்காக மலையாள திரைக்கதை ஆசிரியர்கள் சர்பு, சுகாஸ் திரைக்கதைக்காக பணிபுரிகின்றனர்.

இறுதி கட்ட படப்பிடிப்பு
இந்நிலையில்,படப்பிடிப்பின் இறுதி கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளதாக இயக்குநர் கார்த்திக் நரேன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இத்திரைப்படம் ஒரு புலன்விசாரணை த்ரில்லர் திரைப்படம் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் தனுஷ் ஒரு பத்திரிக்கையாளராக நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றது.

முக்கிய நடிகர்கள்
மாஸ்டர் திரைப்படத்தில் சிறுவயது விஜய்சேதுபதியாக மிரட்டி இருந்த மாஸ்டர் மகேந்திரன் இப்படத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், நடிகர் சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாடலாசிரியர் விவேக் மற்றும் கார்த்திக் நரேன் பாடல்களை எழுதியுள்ளனர்.

திருச்சிற்றம்பலம்
நடிகர் தனுஷ் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படங்களைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் தேதிகள் கொடுத்துள்ளார்.

தெலுங்கு திரைப்படங்களில்
இந்தப் படங்களை எல்லாம் முடித்துவிட்டு, சேகர் கம்முலா இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இதனைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து மற்றொரு தெலுங்குத் திரையுலகின் இயக்குநரான வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்கவுள்ளார். இதனையும் தெலுங்குத் திரையுலகின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ளது.


Click it and Unblock the Notifications











