ஹீரோ .. ஹீரோ ..

By Staff

அலைபாயுதே புகழ் மாதவன் பாலிவுட்டில் நுழைகிறார்.

பிஹார் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பிறந்தவர் மாதவன். இவரது பெற்றோர்கள் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள்.

முதலில் தொலைக்காட்சி இயக்குநர் ஆனந்த் மாதவனின் தொலைக்காட்சித் தொடர் மூலம் பொதுமக்களுக்குஅறிமுகமானார் மாதவன். பின்னர் பேர் அன்ட் லவ்லி உள்பட பல விளம்பரப் படங்களில் நடித்தார்.

அதற்குப்பின் முதல்முதலாக மெகா டைரக்டர் மணிரத்தினத்தின் அலைபாயுதே படத்தில் நடித்து, பெண்கள் மனதைஅலைபாய வைத்தார். அலைபாயுதே படத்தில் நடித்துக் கொண்டிருந்த மாதவனுக்கு அதே ஜோரில் திருமணம்.காதல் மனைவி சரிதாவுடன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவார் இந்த வெள்ளைச் சிரிப்புக்காரர்.

இதையடுத்து "என்னவளே", "மின்னலே" மற்றும் "டும் டும் டும்" ஆகிய படங்களிலும் நடித்து தமிழ்ரசி(கை?)கர்களின் நாடித்துடிப்பை எகிற வைத்தார். இப்போது, அவரை அறிமுகப்படுத்திய ஆனந்த் மாதவனின்படம் ஒன்றில் நடிப்பதற்காக மும்பை சென்றுள்ளார்.

இதற்கிடையே, மாதவன் நடித்த மின்னலே ஹிந்தியில் தயாராகிறது. அதிலும் மாதவனே ஹீரோ. இந்தப் படத்தைபிரபல இந்திப் படத் தயாரிப்பாளர் வாசு பக்னானி தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக "மிஸ் ஏசியா பசிபிக்" டியா மிர்சா நடிக்கிறார்.

இதுகுறித்து மாதவன் என்ன சொல்கிறார்?

ஆனந்த் மாதவனின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். இதுகுறித்து இன்னும் டிஸ்கஸன்ஸ் நடந்து வருகிறது.இசையை மையமாக வைத்து இந்தப் படம் இருக்கும்.

அதிக தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் தொடர்ந்து பல சினிமாவாய்ப்புக்கள் வந்து கொண்டேயிருப்பதால் நடிக்க முடியவில்லை.

இருந்தாலும் டெலிவிஷன் தொடர்களில் நடிப்பதை விடமாட்டேன். மின்னலே இந்தி வெர்ஷனில் நடித்து விட்டுமீண்டும் மணிரத்தினம் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். இந்தப் ப்ராஜெட் ஜூன் 1 ம் தேதிதொடங்குகிறது என்கிறார் சென்னைக்கும், மும்பைக்குமாக பிளைட்டில் பறந்து பறந்து பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் மாதவன்.

மாடலிங் கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றிய மாதவனுக்கும் நடிப்புக்கும் சம்பந்தமே இல்லை. மிகவும்பண்பாக, மரியாதையாக நடந்து கொள்ளும் மாதவன் தனது பளீர் சிரிப்பால் பல ரசிகைகளை கவர்ந்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X