»   »  அம்சு அனுஷ்கா, கிரீன் ரீமா!

அம்சு அனுஷ்கா, கிரீன் ரீமா!

Subscribe to Oneindia Tamil

ரெண்டு படத்தில் இரட்டை திம்சுகளுடன் மாதவன் அட்டகாசம் செய்கிறார்.இருவரில் யார் பசுமை என்பதை தீர்மானிக்க வேண்டிய பெரிய பொறுப்புரசிகர்களுக்கு காத்திருக்கிறது.

குஷ்பு தயாரிக்க, சுந்தர புருஷன் சுந்தர்.சி. இயக்கும் படம்தான் ரெண்டு. மாதவனுக்குஇதில் இரட்டை ஜோடி. ஒருவர் அம்சு அனுஷ்கா, இன்னொருவர் எவர் கிரீன் ரீமாசென்.

நெட்டை நெடிசலாக இருந்தாலும், இருவருமே மாதவனுடன் பின்னிப் பிணைந்துநடித்துள்ளார்களாம். சமீபத்தில் அனுஷ்காவும், மாதவனும் நடித்த ஒரு பாடல்காட்சியை ஏவி.எம்மில் செட் போட்டு எடுத்தனர்.

செட்டுன்னா, சும்மா இல்லை, நீர்வீழ்ச்சி செட்டப்.

அட்டகாசமாக போடப்பட்டிருந்த செட்டில் மாதவனும், அனுஷ்காவும் சேர்ந்துகுளித்து, ஆடிப் பாடிய காட்சி படு பசுமையாக வந்துள்ளதாம். அனுஷுகிட்டேஇவ்ளோ திறமையா என்று ஸ்பாட்டில் இருந்தவர்கள் பிளாட் ஆகி விட்டார்களாம்.

அனுஷ்கா பார்க்க படு பளிச். காலை நேரத்து சூரியனைப் பார்த்து சந்தோஷமாகிப்போன தாமரை போல அலர்ந்து மலர்ந்த முகம் அனுஷுக்கு. அவரது முகத்திலேயேஆயிரம் அலப்பறைகள் அலை மோதுகிறபோது, ஃபுல் நீள கிளாமரில் எப்படிஇருப்பார்?

யோசிக்கவே முடியலைண்ணா

இந்தப் பாட்டில் மட்டுமல்ல, படம் முழுக்க ஜிலு ஜிலுன்னு கலக்கி இருக்கிறாராம்அனுஷ்கா. பெரிய பெரிய திம்சுகளுக்குப் போட்டி போடும் அளவுக்கு அமச்மானகிளாமர் வாகு அனுஷுக்கு. ஸ்டில்களைப் பார்த்தாலே இதயம் ஸ்டிர் ஆகிப் போய்விடும்.

அவருக்குப் போட்டியாக ரீமாவும், விளாசித் தள்ளியுள்ளார். ரீமாவின் முதல்ஜோடியே மேடிதான். மீண்டும் மேடியுடன் இணைந்து நடிப்பது பரம சுகமாகஇருக்கிறதாம் ரீமாவுக்கு. மின்னலேவுக்குப் பிறகு ரெண்டில், ரெண்டு பேரும்ஒன்றாகியிருக்கிறார்கள்.

அனுஷ்கா குஸ்கான்னா, ரீமா சென் கொத்துப் புரோட்டா. கிளாமர் பிரியாணியைரெண்டு பேரும் சரிவிகித சமானமாக பரிமாறி ஜமாய்த்திருக்கிறார்கள்.

இப்படத்தில் இன்னொருவரும் இருக்கிறார். அவர்தான் தாரிகா.புதுப்பேட்டையிலிருந்து சரவணன் படத்தில் நச்சுன்னு வந்து நாட்டுச் சரக்கு பாட்டுக்குஆடினாரே அந்த பப்பளிக்கா பாப்பாதான். இதில் ரீமாவின் தோஸ்தாக வருகிறாராம்தாரிகா.

ரெண்டு பட கிளாமர், ரசிகர்களின் பெண்டைக் கழற்றப் போவதில் சந்தேகம் இல்லை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil